NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் விடுத்துள்ள அறிக்கை :
images%252873%2529

1.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்குபெற்று பணியிடை நீக்கம், 17-b குறிப்பானைகளை உடனடியாக நீக்கி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை வழங்கிட வேண்டுகிறோம்.

2.2016 தமிழக சட்டம் சட்டமன்ற தேர்தலின் போது அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறிய வாக்குறுதியை 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்

3. பள்ளிக் கல்வித் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக ஒளிவு மறைவு இன்றி நடத்திட வேண்டுகிறோம்

4.ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு கருவூலங்களுக்கு உத்தரவிட வேண்டும்

5. ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.இந்த அரசாணையால் ஆசிரியப் பணிக்கு படித்து முடித்து,தகுதிபெற்று காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியப்பணியின் கனவை சிதைக்கும் வகையில் உள்ளது.இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவண்

 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்





1 Comments:

  1. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive