++ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை நாளை முதல் தொடக்கம்: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
588932

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. இணையதளம் மூலமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக அக்.10 முதல் அக். 20 வரை www.tngasapg.in மற்றும் www.tngasapg.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2/- மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.58/- சேர்த்து ரூ.60/- செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணாக்கர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.15 முதல் அக்.20 வரை www.tngasapg.in என்ற இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28276791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

இது தொடர்பாக care@tngasapg.org  மற்றும் tndceoffice@gmail.com என்ற email முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்''.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...