NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DEO பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிசியர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

DSE-DEO Promotion Panel Preparation  Proceeding 2020-21
IMG_20201009_170452
மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் இயக்குநரின் செயல்முறைகள்  நாள்: 09 .10. 2020

2020-2021 ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை

அலுவலர் பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் 01.01.2020 நிலவரப்படி தயாரித்தல் சார்ந்து, அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில், தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு உயர் /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் சார்பான விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 23.10.2020-க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,& மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பரிசீலனை செய்யப்படும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம் (2020-2021 ஆம் ஆண்டு ) -Download 

பரிந்துரைக்கப்படும் படிவத்துடன் கீழ்க்காணும் விவரங்கள் இணைத்து அனுப்ப வேண்டும்

1. விருப்பக் கடிதம் 

2. உரிய படிவம்

3. அசல் மந்தண அறிக்கைகள்

4. தமிழ்நாடு குடிமுறைப் பணி விதியின் கீழ் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டிருப்பின்

குற்றச்சாட்டின் நகல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் தற்போதைய நிலை

5. தண்டனை அளிக்கப்பட்டிருப்பின் அதன் நகல் மற்றும் தண்டணை

நிறைவேற்றப்பட்டமைக்கான ஆவணங்கள்

6. பதவி உயர்வு/ பணியிடமாறுதலுக்கு விருப்பம் மற்றும் விருப்பமின்மை தெரிவித்துள்ளவர்கள் சார்பாக பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளப்பட்ட பதிவின் சான்றொப்பமிட்ட நகல்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive