நீட் தேர்வு முடிவுகள் நேற்று (அக்.16) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன.
திரிபுராவில் 3000 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில் 88 ஆயிரம் பேர் எழுதியதாக முடிவுகளை அறிவித்து இருந்தது, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ).
அதேபோல் உ.பி., உத்தரகாண்ட், தெலுங்கானா மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களில் பலருக்கும் முடிவுகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் என்.டி.ஏ., நீட் முடிவுகளை தனது இணையதள பக்கத்தில் இருந்து திடீரென்று நீக்கி இருக்கிறது.
தவறுகள் சரி செய்யப்பட்டு, சரியான முடிவுகள் இன்று (அக்.17) மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் என்.டி.ஏ. அறிவித்துள்ளது.
இதனால் ஏற்கனவே வெளியான தேர்வு முடிவுகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதால் மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...