NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 மருத்துவ இடங்கள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

594836

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,100 எம்.பி.பி.எஸ் இடங்களும் உள்ளன.

இதற்காக 39,223 பேர் விண்ணப்பித்த நிலையில், 37,983 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

அதில், ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்திலும், நாமக்கல்லை சேர்ந்த மோகனப்பிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும், சென்னையை சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 405 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களுக்காக 951 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கென பிரத்யேக தரவரிசைப் பட்டியலும் வெளியானது. அதில் தேனி அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். கள்ளக்குறிச்சி அன்பரசன் இரண்டாவது இடத்திலும், சென்னை மாணவி திவ்யதர்ஷினி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 5,750 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,954 பிடிஎஸ் இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. கொரோனா காரணமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 18ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளுக்கு 500 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive