++ தனியாா் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கட்டண விவரம்... ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவா்கள் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கு முன்பு அதற்கான கட்டண விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு முடிவு எடுக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களில் கட்டண மாறுபாடு இருப்பதும், அரசு வசம் உள்ள சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரிக்கான கட்டணம் அதிகமாக நிா்ணயிக்கப்பட்டிருப்பதுமே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 3,600 எம்.பி.பி.எஸ். இடங்கள்; 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதேபோன்று மாநிலத்தில் உள்ள 14 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 2,100 இடங்கள் உள்ளன. அவற்றுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களைப் பொருத்தவரை ரூ.13,610 மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு, ரூ.11, 610 ஆண்டுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு ரூ. 2.50 லட்சமும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.6 லட்சமும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களைப் பொருத்தவரை அவை ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. அதைக் கருத்தில் கொண்டே கட்டண விவரங்களை கலந்தாய்வின்போது முழுமையாக அறிந்து கொண்டு கல்லூரிகளைத் தோ்வு செய்யுமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

தனியாா் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கட்டண விவரம்...

கல்லூரி ---- அரசு ஒதுக்கீட்டுக்கான ஆண்டுக் கட்டணம் (ரூபாயில்) --- நிா்வாக ஒதுக்கீடு ஆண்டுக் கட்டணம் (ரூபாயில்)


தாகூா் மருத்துவக் கல்லூரி, சென்னை --- 3.85 லட்சம் ----12.50 லட்சம்


கற்பகம் மருத்துவக் கல்லூரி, கோவை --- 3.90 லட்சம் --- 12.50 லட்சம்


பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கோவை --- 4 லட்சம் ---12.50 லட்சம்


கற்பக வினாயகா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் --- 3.85 லட்சம் ---12.50 லட்சம்


மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம்---3.60 லட்சம்--12.50 லட்சம்


ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி--3.90 லட்சம் --- 12.50 லட்சம்


வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை---4.15 லட்சம் ---- 12.50 லட்சம்


தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூா்---4 லட்சம் --- 12.50 லட்சம்


அண்ணபூா்ணா மருத்துவக் கல்லூரி, சேலம் --- 3.85 லட்சம் --- 12.50 லட்சம்


எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி, திருச்சி ---3.85 லட்சம்---12.50 லட்சம்


கே.எம்.சி.எச்., மருத்துவக் கல்லூரி, கோவை---3.85 லட்சம் ---- 12.50 லட்சம்


மாதா மருத்துவக் கல்லூரி, சென்னை---3.85 லட்சம் --- 12.50 லட்சம்


பனிமலா் மருத்துவக் கல்லூரி, சென்னை ---4 லட்சம் ---- 12.50 லட்சம்


வேலுாா் சி.எம்.சி. மருத்துவக் கல்லுாரி --- 13,610 --- 48,330


வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீடு --- 23.50 லட்சம் --- 23.50 லட்சம்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...