அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு,
பாட புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.தமிழக பாடத்திட்ட
மாணவர்களுக்கு, புதிய கல்வியாண்டு இம்மாதம் துவங்கியது. கொரோனா பரவலால்
பள்ளிகள் திறக்கப்படவில்லை.
'ஆன்லைன்' மற்றும் கல்வி, 'டிவி' வகுப்புகளை துவக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், புதிய கல்வியாண்டுக்கு, 292 கோடி ரூபாய் செலவில், பாட புத்தகங்களை இலவசமாக வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார்.அதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகம் வழங்கும் பணி நேற்று துவங்கியது.ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முதல் பருவ பாட புத்தகங்களும், மற்றவர்களுக்கு முதல் பாக புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரில் வந்து, புத்தகங்களை பெற்றுச் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...