ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் அடிப்படையில் இந்த குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். PHH- AAY என இருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம். NPHH என குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். NPHH-S என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். NPHH-NC என இருந்தால் ரேஷன் கடைகளில் எந்தப் பொருட்களும் தரப்படமாட்டாது. ரேஷன் அட்டையை ஒரு அடையாள அட்டையாகவும் முகவரிச் சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இந்த 5 வகையான குறியீடுகள் உள்ள ரேஷன் அட்டைகளில் யாருக்கு எல்லாம் தமிழ்நாடு அரசின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் மூலம் ரூ.1,000 ரூபாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளில் ஏதேனும் ஒன்று உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். NPHH-S, NPHH-NC ஆகிய 2 குறியீடுகளுக்கு வழங்கப்படமாட்டாது. அதனால், யாரும் தேவையில்லாமல், ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவியாக பெயர் மாற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...