அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிகப்
பணியாளர்களுக்கு ரூ .50 ஆயிரம் மதிப்பில் அரிசி,காய்கறி வழங்கிய அரசுப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
புதுக்கோட்டை,ஜீலை.7:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மருத்துவமனையில் மே 7 ஆம் தேதி முதல்
இயங்கிவரும் கோவிட் 19 நோயாளிகளுக்கான வழிகாட்டும் உதவி மையத்தில்
தன்னார்வலர்களாக தலைமையாசிரியர் கள் மற்றும்ஆசிரியர்கள் ஈடுபட்டு
வருகின்றனர்.
அவர்களின்
முயற்சியால் மருத்துவ மனையில் பணிபுரியும் 90 தற்காலிக பணியாளர்களுக்கு
ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்கள்
அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் முன்னிலையில்
பயனாளர்களுக்கு வழங்கினார்.
நிகழ்வில்
கலந்து கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்களுக்கு மாவட்ட
கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...