தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏழு சங்கங்களின் நிர்வாகிகள், நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் கமிஷனர் நந்தகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:மாணவர்களிடம் மாற்று சான்றிதழ்களான, டி.சி., இல்லாமல், எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது. 'எமிஸ்' எண்ணை மட்டும் வைத்து, மாணவர்களை சேர்க்கும் முறைகளை மாற்ற வேண்டும். கல்வி கட்டணத்தை, பள்ளிகளின் செலவுக்கு ஏற்ப முறைப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைன் வழியில் பாடம் படிப்பது, முழுமையான நிறைவை தராது. நேரடியாக வகுப்பறைகளில் பாடம் நடத்தினால் மட்டுமே, மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.எனவே, வல்லுனர் குழு அமைத்து, உரிய வழிகாட்டுதலுடன் பள்ளிகளை திறந்து பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக அங்கீகாரம் முடிந்த அனைத்து பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றி, தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
10 ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பாடத் திட்டம், தேர்வு முறை சீர்திருத்தம், பாட புத்தக தயாரிப்புக்கான வல்லுனர் குழுக்களில், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினருக்கும் இடம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...