தமிழகத்தில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தல் அவசியம். தற்போது பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வித்தகுதிகள் பதிவிட்டு தரப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் சென்று மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதியலாம் மற்றும் புதுப்பிப்பு செய்து கொள்ளலாம்.
தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி கல்வித் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தோல்வி அடைந்தவர் முதல் முதுகலை பட்டதாரி பிரிவு வரை கல்வித் தகுதியின் அடிப்படையில் இத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு பதிவை தொடர்ந்து புதுப்பிப்பு செய்திருத்தல் வேண்டும். கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களாக இருக்க கூடாது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...