NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நேற்று காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்!

🟣 பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.


 🟣 பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



🟣 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் .

🟣 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பார்ப்பதற்கு , 

அனைத்து ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு,

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.  

 🟣 உரையாடிய விவரத்தினை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

🟣 கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரிபார்த்து திருத்தி ,மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும் வழங்கிட வேண்டும். 

🟣 கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்தவிதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் 

வரவேண்டும்.

🟣 அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும், 

🟣 மேற்கண்டவாறு இயக்குனர் அவர்களுடைய அறிவுரைகளை, சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியரிடமும் கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும் 

🟣 மேலும், இயக்குனர் அவர்களுடைய அறிவுரையை முழுமையாக தங்கள் பள்ளியில் கடைப்பிடிப்பதற்கு, நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர் களும் ,

உடனே தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive