இந்திய
விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில், 'தொலை உணர்வின் முக்கியத்துவம்
மற்றும் சுற்றுச்சூழல் கல்வியில் பயன்பாடு' என்ற தலைப்பில் வரும் 26 முதல்
30ம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், 10, பிளஸ் 1 மற்றும்
பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 'யுடி யூப்' வாயிலாக நேரடியாகவும்
ஒளிபரப்பப்படும். தினமும் காலை 10:00 முதல் 10:45; மதியம் 12:00 முதல்
12:45 மணி வரை வகுப்பு நடைபெறும். வகுப்பு முடிந்தவுடன், அதில் இருந்து
வினாடி - வினா போட்டியும் நடத்தப்படும்.
இப்பயிற்சிக்கு
எவ்வித கட்டணமும் கிடையாது.உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர்
கண்ணபிரான் கூறுகையில், ''மாணவர்கள், தங்களது தகவல் மற்றும் புகைப்படத்தை
இஸ்ரோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவுடன், இ - மெயில் முகவரிக்கு,
கடவுச்சொல் அனுப்பப்படும்.''அதைப் பயன்படுத்தி, ஆன்லைன் வழி படிப்பில்
இணையலாம். ஆக., 5ல் இஸ்ரோ சான்றிதழ் வழங்கப்படும். 'இப்பயிற்சி, தொலை
உணர்வு சார்ந்த ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...