இந்தியாவில் புதிய ஊதிய குறியீடு மசோதாவின் மூலம் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
புதிய ஊதிய குறியீடு:
மத்திய அரசு கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் புதிய ஊதியக் குறியீட்டை நிறைவேற்றியிருந்தது. அதன்படி, வருகிற 2021 ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விதி அமலுக்கு வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையும். புதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை குறைத்துள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ் கிராச்சுட்டியின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் அடிப்படை சம்பளத்தின்படித்தான் கிராச்சுட்டி கணக்கிடப்படுகிறது. மேலும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் கிராச்சுட்டியின் அளவும் அதிகரிக்கும். கிராச்சுட்டி தவிர நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பும் அதிகரிக்கும். இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் சேமிப்பு அதிகரிக்கும்.
இந்த திட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் மூன்று தொழிலாளர் குறியீடுகள், தொழிற்துறை இணைப்புகள், வேலையின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான விதிகளை மாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...