கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி கற்பது குறித்து புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழல் உள்ளதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகக் கற்பிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்டக் கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, இலுப்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி லத்திகா சரணின் வீட்டுக்கு இன்று (ஜூலை 1) சென்று மாணவியுடன் ஆலோசனை செய்தார்.
அப்போது, பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வுப் பணி மேற்கொண்டு வரும் மாவட்டக் கல்வி அலுவலரை, பெற்றோர்கள் வரவேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...