"கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் சோ்க்கை பெற இதுவரை 48,000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 8,446 தனியாா் பள்ளிகளில் சுமாா் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன.
நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 5-ஆம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். இதற்கிடையே விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்."
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...