பொது விநியோக திட்டத்தின் இணையதளம் கடந்த சில நாட்களாக முடங்கி இருக்கும் காரணத்தால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் காரணமாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பாக அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள முடியாத சூழல் நிலவியது. இதனால் தகுதியான மனுக்களுக்கு ஒப்புதல் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் கடந்த சில வார காலமாக வைரஸ் தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை,
புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணிகள்,
கைவிரல் ரேகை பதிவினையும் மீள செயல் முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 3 மாதங்களில் ரேஷன் அட்டை தொடர்பாக அதிகப்படியான விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக உணவுப் பொருள் விநியோக துறை சேர்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். புதிதாக திருமணமானவர்கள், இதுவரை குடும்ப அட்டை பெறாதவர்கள் என அனைவரும் கடந்த 3 மாதமாக இணையம் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இவர்கள் தமிழக அரசின் உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற பொது விநியோக திட்ட இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து வருகின்றனர். தற்போது மாநில மக்கள் பலர் ரேஷன் கார்டுகளை பெற விண்ணப்பித்து வருவதால் அதற்கான தளம் பிசியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக TNPDS இணையதளம் கடந்த சில தினங்களாக முடங்கி இருக்கிறது. இதனால் இணையதளம் மூலம் எந்த ஒரு சேவையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...