ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேங்கி கிடக்கும் ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது மற்றும் 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது போன்றவை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. விதிமீறல் டி.ஆர்.பி., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளில், முறைகேடுகள் மற்றும் விதி மீறல்கள் நிகழ்ந்ததாக புகார்கள் உள்ளன.
இது குறித்து, சென்னை போலீசிலும் சில வழக்குகள் விசாரணையில் உள்ளன. விலகல்டி.ஆர்.பி., நடத்திய போட்டி தேர்வு குறித்தும், நியமன நடவடிக்கையில் விதிமீறல்கள் குறித்தும், ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதன் காரணமாக, டி.ஆர்.பி.,யின் பணி நியமன நடவடிக்கைகளில் இருந்து உயர் கல்வித்துறை விலகியுள்ளது.
டி.என். பி.எஸ்.சி., வழியே கல்லுாரி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு மாதங்களாக டி.ஆர்.பி.,யின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதுகுறித்து, நமது நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. அதனால், டி.ஆர்.பி.,யில் பணிகளை தொடர, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, டி.ஆர்.பி., தொடர்பாக தேங்கி கிடக்கும் வழக்குகளை முடிக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
அறிவுறுத்தல்
இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் லதா தலைமையில், உறுப்பினர் செயலர் சேதுராம வர்மா, உறுப்பினர் அறிவொளி, பாஸ்கர சேதுபதி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப் பட்டு உள்ளது.இந்த குழுவினர், அரசின் சட்டத்துறை வல்லுனர்களுடன் இணைந்து, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு பணிகளை கவனிக்க, புதிதாக சட்ட உதவியாளர்கள் இருவரும் நியமிக்கப்பட உள்ளனர்.
சட்ட உதவியாளர் பணிக்கு, தேசிய சட்ட கல்லுாரி அல்லது சென்னையில் சீர்மிகு சட்ட கல்லுாரியில் சட்டப்படிப்பு முடித்த அல்லது சட்ட மேற்படிப்பு படிப்போர், வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனம் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் இருவருக்கு, மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...