Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2021-22 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

2021-22 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளின் ( BVSc & AH - கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் BTech - உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு ) சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.10.2021 மாலை 06.00 மணி வரை இணையவழி மூலமாக விண்ணப்பங்கள் ( Online applications ) வரவேற்கப்படுகின்றன.

இணையவழி விண்ணப்பம் , தகவல் தொகுப்பேடு , சேர்க்கைத் தகுதிகள் , தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் காணலாம்.

 இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் மேலும் , அயல்நாடு வாழ் இந்தியர் ( NRIs ) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் ( Wards of NRIs ) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் ( NRI Sponsored ) மற்றும் அயல்நாட்டினர் ( Foreign National ) இட ஒதுக்கீடு , இணையவழி விண்ணப்பப் படிவங்கள் , வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இடம் : சென்னை - 600 051 

நாள் : 09.09.2021 தலைவர் செ.ம.தொ.இ / 815 / வரைகலை / 2021 சேர்க்கைக் குழு ( இளநிலை பட்டப் படிப்பு )

IMG_20210910_183734




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive