Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BE - BTech - Avionics

  


 'ஏவியானிக்ஸ்' என்பது விமானத்தில் உள்ள மின்னணு அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் கருவிகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வு. இதை விமானம் மற்றும் மின்னணுவியலின் கலவை என்றும் சொல்லலாம்.

படிப்புகள்

விமானங்கள், செயற்கோள்கள், விண்கலங்கள் ஆகியவற்றில் உள்ள எலக்ட்ரானிக் அமைப்புகளை பராமரித்தல், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு எலக்ட்ரானிக் மற்றும் கணினி அமைப்புகளை நிறுவுதல், வடிவமைத்தல் குறித்த முழுமையான பாடத்திட்டமே ஏவியானிக்ஸ் (ஏவியேஷன் + எலக்ட்ரானிக்ஸ்).

பி.டெக்.,-ஏவியானிக்ஸ்


இது ஒரு 4 ஆண்டுகால இளநிலை படிப்பாகும். இதில் விமான அமைப்புகளின் அடிப்படைகள், விமானத் துறைக்கான மின்னணு மற்றும் கணினி அமைப்பு, கணினியின் கட்டளைக்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்களை உருவாக்குதல் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளன.

விமானத்தில் உள்ள விமானியின் பகுதியில் இருக்கும் கணினி அமைப்புகள், கண்ட்ரோல் யூனிட்கள், இயந்திரநுட்பங்கள் ஆகியவை குறித்தும், புதிய இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கணினி அமைப்புகளை வடிவமைத்தல், தகவல் தொழில்நுட்பம், கணினி அமைப்புகள் மேம்படுத்தல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடங்கள், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு ஆகியவற்றைக் குறித்தும் கற்பிக்கப்படுகின்றன.

பி.எஸ்சி.,- ஏவியனிக்ஸ்


இது ஒரு 3 ஆண்டுகால பாடத்திட்டம். சிவில் ஏவியேஷன், இன்ஜினியரிங் வரைபடம், மின்னணு அமைப்பு மற்றும் சாதனங்கள், விமானங்கள் மற்றும் விமான சாதனங்களின் அடிப்படைகள், டிஜிட்டல் நுட்பங்கள், விமான மின் அமைப்பு, விமான கருவி அமைப்பு, விமான வானொலி தொடர்பு, விமான எரிபொருள் அமைப்பு ஆகிய பாடத்திட்டங்களை உள்ளடக்கியது.

இளநிலை பட்டப்படிப்பிற்கு பிறகு, எம்.டெக்., எம்.எஸ்சி., பிஎச்.டி., போன்ற உயர்கல்வியையும் தொடரலாம்.

வேலை வாய்ப்புகள்


இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமான பாதுகாப்பு பணியகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இந்திய விமானப்படை, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய விமானத்துறை சார்ந்த நிறுவனங்களில் டெவலப்மெண்ட் இன்ஜினியர், டிசைன் இன்ஜினியர், சென்சார் இன்ஜினியர், ஏவியனிக்ஸ் இன்ஜினியர், போன்ற பதவிகளில் அமரலாம். கல்வி நிறுவனங்களி பேராசிரியர் ஆகவும் பணிபுரியலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive