Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BSc - Forensic

 


 

தடயவியல் அல்லது தடய அறிவியல் என்பது அறிவியலின் உதவியோடு குற்ற செயல்களை ஆராயும் ஓர் துறை. குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் நிபுணர்கள் மாற்றுகின்றனர்.

குருதி, முடி, வாகன சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடித் தடங்கள், வெடி பொருள்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல்பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன.

வேலை விவரம்

இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளைத் தீர்க்க உதவும் தகவல்களை சேகரித்து தடயவியல் வல்லுநர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகைகளில் தடயவியல் பணி அமைகின்றது. காவல்துறை, சட்ட அமலாக்கத்துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடயவியல் துறையை நாடுகின்றனர். தற்காலத்தில் பெண் தடயவியல் ஆய்வாளர்களும் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ., மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்பதை கண்டறிவது, ஒருசில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கியத் தகவல்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவுகிறது.

தடவியலார்களும் அறிவியலும்

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருள்கள் பயன்பாடு போன்ற குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கிறது. நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மையை கண்டறிதல், சரியான நபர்களை அடையாளம் காண்பதற்கு தேவையான தடயங்களை எடுத்து அறிவியல்பூர்வமாக நிரூபித்தல் ஆகியவை தடய அறிவியலின் பணி ஆகும்.

பண்புகள்


மேலும், தடயவியல் வல்லுநர்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல்துறையினர் இவர்களின் தேவையைக் கருதி அழைக்கும்போது குற்றம் நடந்த இடத்திற்கு செல்வார்கள். குறிப்பிட்ட குற்றத்திற்கு என்று மட்டுமல்லாமல், அனைத்து வகையான குற்றங்களையும் கண்டறியும் பணிகளையும் தடய அறிவியல் துறை மேற்கொள்கிறது. தடய அறிவியலில் நிபுணருக்கு தனித்திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும். தருக்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும்.

பட்டப்படிப்புகள்

தடய அறிவியலின் பல்வேறு பிரிவுகள் உள்ளன. கைரேகை, நுண்ணுயிரியல், உளவியல், பல்லமைப்பியல், நோக்கு உயிரியல் என பல வகைகள் உள்ளன. சைபர் தடயவியலில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ தடய அறிவியல், பி.எஸ்சி.,/எம்.எஸ்சி.,- தடய அறிவியல், பிஎச்.டி.,- தடய அறிவியல் ஆகிய படிப்புகள் உள்ளன.

வேலை வாய்ப்புகள்

தடயவியல் விஞ்ஞானி, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், புலனாய்வு அதிகாரி, கள புலனாய்வாளர், குற்ற அறிக்கையாளர் போன்ற பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive