இது தொடர்பாக பள்ளிக்கல்விதுறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மேல்நிலைக்கல்வியில் கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பதவியும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவியும் ஒன்றுபோல் இருப்பதால், கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பதவி தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி சிறப்பு விதியுடன் இணைக்கப்படுகிறது.
இப்பதவிக்கான கல்வித்தகுதி பி்ன்வருமாறு நிர்ணயிக்கப்படுகிறது. கணினி பயிற்றுநர் பதவிக்கு எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பும், பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி. படிப்புடன் ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். அல்லது பி.ஏ., பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இளங்கலை பட்டமும், முதுகலை படிப்பும் ஒரே பாடத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பழைய அரசாணையின்படி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் டெக்னாலஜி பாடங்களில் எம்.டெக். அல்லது எம்.இ. பட்டமும், பி.எ.ட் பட்டமும் பெற்றவர்களும் கணினி பயிற்றுநர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட புதிய அரசாணையின்படி, எம்.இ. எம்.டெக்.பட்டதாரிகள் இந்தப் பணிக்கு தகுதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.







Andha g.o va paathutu information podunga sir , avanga common ah P.G nu than kuduthu irrukanga , M.Sc mattum nu entha idathulayum.sollala, paper news ah apdiyea eduthu pottu confuse panni , padichavanga manasa kaya paduthaatheenga...
ReplyDeleteGo?
ReplyDelete