Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் தொடர்பாக பயிற்சி

22792 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தெ ாடக்கப் பள்ளிகள், மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக செயல்வழிக் கற்றல் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான 3 பயிற்சி நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 
தற்போது 2025-2026ம் கல்வி ஆண்டு முடிவடைய நிலையில் மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டான 2026-2027ல் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறக்கப்படும் போது வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.ருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் மாவட்ட வாரியாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு முதல் பருவப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் குழுவினர் பரிந்துரை செய்துள்ள கருத்துகளை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் தொடர்பாக கல்வியாளர்களிடம் இருந்து கருத்துருக்கள் பெறப்பட உள்ளன. மாநில பாடத்திட்டம் தொடர்பாக பாடங்களை உருவாக்கவும் ஆசிரியர்கள் குழுக்களை ஈடுபடுத்தி பாடங்களை எழுதுவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன
 
பாடத்திட்டங்களை உருவாக்கும் போது தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் பாடங்களில் உள்ள உரையை எளிதில் உணரும் வகையிலும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட உள்ளன. 

மேலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலனா வரைவுப்பாடத்திட்டம், முதலுதவி மற்றும் பாதுகாப்பு, சுய அடையாளத்தை புரிந்து கொள்ளுதல், மாணவர்கள் தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ளும் நடைமுறைகள், சிறு வயதில் இருந்தே நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்தல் போன்ற புதிய கருப்பொருள்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதையடுத்து, மே மாதம் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் வகையிலும், அ வற்றை ஆசிரியர்கள் கற்பிக்கும் வகைகளையும் பயிற்சியாக அளிக்கப்படும். அதற்கான அட்டவணை தயாரிக்கமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
புதிய பாடத்திட்டத்தை பொருத்தவரையில் புதிய பாடப்புத்தகங்கள், பாரம்பரியமான உரை சார்ந்த வடிவத்தில் இருந்து விலகி, அதிக செயல்பாடுகளை சார்ந்த உள்ளடக்கத்தைக் ெகாண்டிருக்கும். முந்தைய திருத்தங்களின்போது பாடப்புத்தங்களில் QR குறியீடுகள் இணைக்கப்பட்ட காணொளிகள் எளிமையாக்கப்பட்டு கருத்துருக்களை புரிந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 மேலும் இந்த பயிற்சியின் போது, மாற்றங்கள் குறித்த முன்னோட்டத்தையும், பின்பற்ற வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய வகுப்பறை நடைமுறைகளின் சரிபார்ப்பு பட்டியல்களும் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive