Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2023%2F02%2F17%2Fxlarge%2F945292 
மத்​திய அரசின் அறி​வுறுத்​தலின்​படி நாடு முழு​வதும் உள்ள பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் கல்​லூரி​கள் அருகே இருக்​கும் 5 அல்​லது 6 அங்​கன்​வாடி மையங்​களை தத்​தெடுக்க வேண்​டும். அங்​குள்ள குழந்​தைகளுக்கு தரமான கல்​வி, பராமரிப்பு கிடைக்க உதவ வேண்​டும். 
 
இந்த சமூகப் பணி​களை மாணவர்​களின் பாடத் திட்​டத்​துடன் இணைக்க வேண்​டும்.3 முதல் 6 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்​கான ஆரம்​பக்கல்​வியை மேம்​படுத்​தவே இந்த முன்​னெடுப்பு மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. அங்​கன்​வாடி மையங்​களுக்கு மாணவர்​கள் சென்று களப்​பணி​களில் ஈடு​படலாம். இது மாணவர்​களுக்கு அனுபவ ரீதி​யான கற்​றல் மற்​றும் சமூகப் பொறுப்​புணர்​வை​யும் உரு​வாக்​கும்.
 
மேலும் அங்​கன்​வாடி மையங்​களுக்கு தொடர்ச்​சி​யான கல்வி மற்​றும் கள ரீதி​யான வழி​காட்​டு​தலை உயர்​கல்வி நிறு​வனங்​கள் வழங்க வேண்​டும். எனவே, உயர்​கல்வி நிறு​வனங்​கள் சமூக மேம்​பாட்டு நடவடிக்​கை​களின் ஒரு பகு​தி​யாக அங்​கன்​வாடிகளு​டன் இணைந்து செயல்பட வேண்​டும். பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி, அனைத்து வித​மான உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கையில் இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive