தேர்தல்
பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே பணி வழங்க
வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை
விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேர்தல்
பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அஞ்சல் வாக்குகளை உரிய நேரத்தில்
அளிக்கும் வகையில் முன்கூட்டியே வழங்கிட வேண்டும். தேர்தல் பணியாற்றும்
பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, மின்விசிறி உள்ளிட்ட
அடிப்படை தேவைகளை வழங்கிட வேண்டும்.
நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும். உடல் நிலை பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், மகப்பேறு
விடுப்பில் உள்ளோர் மற்றும் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விலக்கு
கோருபவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து தவிர்ப்பு வழங்கிட வேண்டும்.
தேர்தல்
பணியில் ஈடுபடுவோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி, பாதுகாப்பு
வசதி ஏற்படுத்தி தரவேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பெண்
ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே பணி வழங்க வேண்டும் என
குறிப்பிட்டுள்ளார்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...