Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'Youth Polling Station' - சட்டமன்றத் தேர்தலில் புதுமை

 சட்டமன்ற தேர்தலில் புதுமை

முதல் முறையாக 'இளைஞர் வாக்குச்சாவடி' (யூத் போலிங் ஸ்டேஷன்)தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படுகிறது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் ஏதாவது ஒரு புதுமையை புகுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு நகரிலும் மாற்றுத் திறனாளிகள் தனி வாக்குச்சாவடியை அமைத்தது. இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அதிகாரி மற்றும் வாக்குப்பதிவு நிலை-2, வாக்குப்பதிவு நிலை-3 அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளாகவே நியமிக்கப்பட்டனர். இதனால் முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மூலமாகவே அவை நிர்வாகம் செய்யப்பட்டன.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொகுதிக்கு ஒரு நவீன வசதிகள் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி (மாடல் போலிங் ஸ்டேஷன்) அமைக்கப்பட்டது. அந்த வரிசையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. தொகுதிக்கு ஒரு இளைஞர் வாக்குச் சாவடி (யூத் போலிங் ஸ்டேஷன்) என்பதே இந்த புதுமையாகும்.

இந்த இளைஞர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் 30 வயதிற்கு உட்பட்ட இளம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாகவே நியமிக்கப்படுவார்கள்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive