அதன்படி, வரும் கல்வியாண்டில் (2026-27) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-ல் தொடங்கி பிப். 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வெழுத சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. அவற்றை https://cuet.nta.nic.in/ எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...