OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2026




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:55.செங்கோன்மை

குறள் எண்:541

குறள்:

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்:

நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.

பழமொழி :

Wake not a sleeping tiger.

தூங்கும் புலியை இடறாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் . 

 2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.

பொன்மொழி : 

ஆரோக்கியமே வாழ்வின் மிகப்பெரிய செல்வம்; விழிப்புணர்வும் சரியான பராமரிப்பும் ஆரோக்கியமான சமூகத்தின் அடித்தளம்!

Thought for the Day :

Health is life's greatest wealth; awareness and proper care are the foundations of a healthy society.

பொது அறிவு : 

1.2026 ஆம் ஆண்டு உருவான புயலின் பெயர் என்ன? 

முரசு புயல். 

2. முரசு புயல் எந்த கடலில் உருவாகியுள்ளது? 

வங்காள விரிகுடா. 

English words :

1. Ambivalent - இருமனப்போக்குள்ள - Uncertain

2. Eloquence - சொற்பொழிவாற்றல் Oloquence

புவியியலும் சுற்றுசூழலும் :

ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்
• அமைவிடம்: விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட எல்லைப் பகுதி.
• சிறப்பு: அருகி வரும் இனமான சாம்பல் நிற அணில்களைப் பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சரணாலயம்.
• விலங்கினங்கள்: சாம்பல் நிற அணில்கள், பறவைகளின் பல வகைகள், சிறுத்தைகள்.

NMMS :

MAT 

அருண் ரவியைக் காட்டி, “இவர் என் தந்தையின் ஒரே மகனின் மகன்” என்கிறார். ரவி அருணுக்கு என்ன உறவு?

A. Son / மகன் 

B. Brother / சகோதரர் 

C. Father / தந்தை 

D. Nephew / மருமகன்

விடை:A) மகன்

நவம்பர் 17

லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்


லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

 🌳 உதவி செய்தவரை மறக்கக் கூடாது

ஒரு அழகான கிராமத்தில் ராஜன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் புத்திசாலி. ஆனால், சில நேரங்களில் மற்றவர்கள் தனக்குச் செய்த உதவிகளை நினைவில் வைத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பான்.

ஒருநாள் ராஜன் பள்ளிக்குச் செல்லும்போது வழியில் ஒரு சிறிய பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவன் கால் தவறி கீழே விழுந்தான். அவனுடைய புத்தகப் பையும் ஆற்றில் விழுந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த சிலர் இவன் நன்றி இல்லாதவன் என்று கூறி கடந்து சென்று விட்டனர்.

அந்த வழியாக வந்த ஒரு வயதான விவசாயி அவனுடைய நிலையைக் கண்டு உடனே ஓடிவந்து அவனைப் பாதுகாப்பாகத் தூக்கினார். பின்னர் அவனுடைய புத்தகப் பையையும் எடுத்துக் கொடுத்து, வீட்டிற்குச் செல்ல உதவி செய்தார். ராஜன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த விவசாயி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. அந்த வழியாக வந்த ராஜன் அவரைப் பார்த்தான். உடனே அவருக்கு உதவி செய்து, அருகில் இருந்தவர்களின் துணையுடன் அவரை வீட்டிற்குக் கொண்டு சேர்த்தான்.

அப்போது விவசாயி ராஜனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். தான் செய்த சிறிய உதவியை ராஜன் மறக்காமல் நினைவில் வைத்திருப்பதைக் கண்டு அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அன்று முதல் ராஜன் ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொண்டான். தனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும், நம்மால் முடிந்தபோதெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் உறுதி எடுத்துக்கொண்டான்.

நீதி:

நமக்குத் துன்பம் ஏற்படும் நேரத்தில் உதவி செய்பவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது. நன்றியுணர்வுடன் வாழ்வதே சிறந்த பண்பாகும்.

பொன்மொழி:

🌷 "உதவியை மறப்பவன் உயர்வதில்லை; நன்றியை மறக்காதவன் என்றும் மதிக்கப்படுவான்."

நன்றி மறப்பது நன்றன்று

இன்றைய செய்திகள்

17.11.2026

🗒️கைத்தறி மற்றும் கதர் துறை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.

🗒️அக்வான்’ புயல் எதிரொலி.. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் 

🗒️உலக பாரம்பரிய தினம்: 19-ம் தேதி தாஜ்மகாலை பார்வையிட இலவசம் என  இந்திய தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

🗒️11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஆசியான் கூட்டமைப்பின்  23 வது மாநாடு  பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ளது.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏃🏻‍♀️கால்பந்து : நேஷன்ஸ் லீக் குரூப் ஏ3 பிரிவில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து 15 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.

🏃🏻‍♀️கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தல்,ஆகிப் நபிக்கு சிறப்பு பதக்கம் வென்றுள்ளது.

Today's Headlines

1. The Tamil Nadu Government has ordered the allocation of funds for announcements related to the Handloom and Khadi Department.

2. Due to Cyclone ‘Agwan’, there is a chance of very heavy rainfall in three districts, including Chennai.

3. World Heritage Day: The Archaeological Survey of India has announced that visitors can enter the Taj Mahal for free on the 19th.

4. The 23rd summit of the ASEAN bloc, which has 11 member countries, is set to take place in the Philippines.

🏀 Sports News

⚽ Football:

5. England defeated Spain in the Nations League Group A3 and secured first place with 15 points.

🏏 Cricket:

6. Aaqib Nabi won a special award for his outstanding performance in the One-Day series against New Zealand.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive