OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு!

1497499 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் எனவும், தவறினால் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல், ஆண்டு வாரியான பணிமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆண்டு வாரியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என கடந்த ஜூன் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

5 மாதங்கள் கடந்தும் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஆசிரியர்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜூன் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி ஜூன் 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இதுவரை எந்த தடை உத்தரவும் இல்லை. எனவே, பதவி உயர்வுக்கான கலந்தாய்வை தொடர்ந்து நடத்தலாம் எனவும், அது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, கடந்த ஜூன் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

தவறினால், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் டிசம்பர் 8-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டி வரும் எச்சரித்து, விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive