OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

பள்ளி நுாலகங்களுக்கு வழங்கிய புத்தகங்களையும் ஆய்வு செய்ய கல்வித்துறையினர் வலியுறுத்தல்

 
தமிழகத்தில் உள்ள பள்ளி நுாலகங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் வழங்கிய புத்தகங்கள், அதன் மதிப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். கோவையில் திறக்கப்பட்ட ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்தில் ஏ.ஐ., மூலம் எழுதப்பட்ட போலி புத்தகங்கள் பல கண்டறியப்பட்டன. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நுாலகங்களிலும் போலி புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.


 போலி புத்தகங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ரூ. பல லட்சம் மதிப்பிலான ஆயிர கணக்கான புத்தகங்கள் அனுப்பபட்டுள்ளன. கல்வித்துறையினர் கூறியதாவது: புத்தகங்கள் பல தலைப்புகளில் வந்துள்ளன. குறிப்பாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு அதிக புத்தகங்கள் அனுப்பபட்டுள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் குறைந்த பக்கங்கள் கொண்டிருந்தாலும் அதன் விலை அதிக அளவில் உள்ளது.


 புத்தகங்கள் வழங்கிய பதிப்பகங்கள் சில ஒரே முகவரியில் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக ஒரே முகவரியில் இரண்டு பதிப்பகங்கள், ஒரே முகவரியை ஆங்கிலத்திலும், தமிழிழும் என மாறி மாறி பதிவிட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள நுாலகங்களில் தகுதியான புத்தங்கள் உள்ளதா, மேலும் உரிய விலைக்கு அவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா என குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive