மரக்காணம் அருகே உள்ள கந்தாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி திறக்காததால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்டசெய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 29 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜெயனாபீ, ஆசிரியர் விஜயசேகர், தற்காலிக ஆசிரியர் மீனா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் ஜெயனாபீ, ஆசிரியர் விஜயசேகர் ஆகிய இருவரிடம் தனித்தனியாக பள்ளிக்கூடத்தின் சாவி உள்ளது. இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கூடம் திறக்க இரு ஆசிரியர்களும் வராததால் மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். தற்காலிக ஆசிரியை மீனா வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு வந்தார். பள்ளிக்கூடம் திறக்காததால் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்பொழுது தலைமை ஆசிரியர் சொந்த வேலை இருப்பதாகவும் பள்ளிக்கூடத்தின் சாவி ஒரு கடையில் கொடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்பின் சத்துணவு பொறுப்பாளர் அமுதா, மீனா ஆகிய இருவரும் தலைமை ஆசிரியர் கூறிய கடைக்கு சென்று சாவியை வாங்கிக் கொண்டு வந்து அதன் பின் பள்ளிக்கூடத்தை 10 மணிக்கு மேல் திறந்துள்ளனர். மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
பின்னர் தற்காலிக ஆசிரியர் மாணவர்களை பள்ளிக்கூடத்திற்குள் அமரவைத்து பாடம் கற்பித்துள்ளார். ஆனால் மாணவ மாணவிகள் 12 மணிக்கு மேல் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் கூறியுள்ளனர் அதன் பின் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் விசாரணைக்கு பின் தலைமை ஆசிரியர் ஜெயனபீயை பணியிடை நீக்கம் செய்தும் விஜயசேகர் மற்றும் தற்காலிக ஆசிரியர் மீனா ஆகிய இருவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...