சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்று, மறுநியமன அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அக். மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, பள்ளி கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவும், மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டும் ஓய்வுபெற்ற அனுபவமிக்க ஆசிரியர்கள் மறுநியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சி.பி.எஸ்., தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைச் சிக்கல்களால், அவர்களுக்கு அக். மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். நிர்வாக சிக்கல்களை காரணம் காட்டி, ஆசிரியர்கள் பணியாற்றியதற்கான ஊதியத்தை நிறுத்தி வைப்பது நியாயமற்றது. எனவே, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.
ஊதியப்பட்டியல் தயாரித்தல் மற்றும் சி.பி.எஸ்., ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும், சி.பி.எஸ்., இறுதி பலன்களையும் மறுநியமன கால ஊதியத்தையும் தனித்தனி நடைமுறைகளாக கையாள்வதுடன், இனிவரும் மாதங்களில் தடையின்றி உரிய தேதியில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும், மறு நியமனம் பெற்ற CPS, ஆசிரியர்களுக்கு, July-ல் இருந்து ஒரு மாத சம்பளம் கூட வரவில்லை.
ReplyDelete