Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.07.26

 

மும்பை பங்குச் சந்தை





திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:446

குறள்:

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

பொருள்:

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.  

பழமொழி :

As rare as hen's teeth.

அத்தி பூத்தார் போல.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

அறிவு வளர வளர பணிவும் வளர வேண்டும்.

Thought for the Day :

Small steps taken every day lead to great achievements.

பொது அறிவு : 

1.உலகில் அதிகமாக விளையும் காய்கறி எது? 

உருளைக்கிழங்கு. 

2. மனித உடலின் மிகவும் நீளமான தசை எது? 

நாக்கு.

English words :

Justify – Defend, நியாயப்படுத்து.

Knock – Strike, தட்டு.

புவியியலும் சுற்றுசூழலும் :

உள்ளாட்சி அமைப்புகள் மூன்றாக பிரிக்கப் பட்டுள்ளது.

1. கிராம பஞ்சாயத்து

2. நகராட்சி

3. மாநகராட்சி

NMMS :

MAT 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி 

(1) வட்டம் 

(2) இணைகரம் 

(3) சாய்சதுரம் 

(4) சரிவகம் 

விடை: (1) வட்டம்

ஜூலை 09

9 ஜூலை 1875 - இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை இந்த நாளில் நிறுவப்பட்டது.

நீதிக்கதை

  "விக்னேஷின் ஒரு நாள்"

ஒரு நகரத்தில் விக்னேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் கைபேசி, தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள்தான் பிடிக்கும். பள்ளி முடிந்ததும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அவற்றிலேயே நேரத்தை கழிப்பான்.


ஒருநாள் பள்ளி விடுமுறை . பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தடைப்பட்டது. 


 வேறு வழியில்லாமல் வீட்டிற்கு அருகிலிருந்த பூங்காவிற்குச் சென்றான். அங்கே வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றிப் பறப்பதையும், தேனீக்கள் தேன் சேகரிப்பதையும், மரக்கிளைகளில் பறவைகள் இனிமையாகக் கீச்சிடுவதையும் பார்த்தான். 


மெல்லிய காற்று அவன் முகத்தைத் தழுவியது. அருகிலிருந்த குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. அந்த அழகைக் கண்டு விக்னேஷின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.


அப்போது அங்கு நடை பயிற்சி செய்து கொண்டிருந்த கவுன்சிலர் அண்ணன்,, "என்ன தம்பி, இயற்கையை ரசிக்கிறாயா? நல்லா இருக்கா ?” என்று கேட்டார். “ஆமாம் அண்ணா. இவை எல்லாம் பார்க்க ரொம்ப அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்றான். 


அந்த அண்ணன்,“ஆமாம் தம்பி, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இந்த அழகை எந்தத் திரையும் தர முடியாது,. உனக்கு ஓய்வு நேரங்களை இயற்கையோடு செலவிட்டுப் பார். இன்னும் மகிழ்ச்சியடைவாய் " என்றார்.


அந்த நாளிலிருந்து விக்னேஷ் தினமும் சிறிது நேரமாவது வெளியில் சென்று மரங்கள், மலர்கள், பறவைகள், சூரிய உதயம், மாலைச் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை ரசிக்கத் தொடங்கினான்.


 இதனால் அவன் மனமும் அமைதியாகி, படிப்பிலும் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தான்.


நீதி: 

இயற்கையை ரசித்து வாழ்வது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும். 🌿🌸

இன்றைய செய்திகள்

09.07.2026

🗒️முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை. செட்டிநாடு குழுமம் தனது பல்துறை வணிகங்கள் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.

🗒️34 கோடி சந்தாதாரர்களுக்கு 15-ந்தேதிக்குள் 8.25 சதவீத பி.எப். வட்டி வந்து சேரும்: மத்திய மந்திரி அறிவிப்பு.

🗒️சீனாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி - தொடரும் தீவிர மீட்புப் பணிகள்.

 விளையாட்டுச் செய்திகள்

🏀திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெற்றோம் என இந்தியாவிற்கு எதிரான 3வது T20  போட்டியின் வெற்றிக்குப் பிறகு  இங்கிலாந்து கேப்டன் பெருமிதம். 

Today's Headlines

🗒️ Chettinad Group Donates ₹3 Crore to the Chief Minister's Public Relief Fund
The Chettinad Group has donated ₹3 crore to the Chief Minister's Public Relief Fund. Through its diverse business ventures, the group continues to contribute to India's development.

🗒️ 8.25% EPF Interest to Be Credited to 340 Million Subscribers by July 15: Union Minister. The Union Minister announced that the 8.25% Employees' Provident Fund (EPF) interest will be credited to the accounts of 340 million subscribers by July 15.

🗒️ 20 Killed in Severe Floods and Landslides in China; Rescue Operations Continue
At least 20 people have died after severe floods and landslides struck China. Intensive rescue operations are still underway.

Sports News

🏀 England's captain expressed pride after the victory in the third T20 match against India, stating that they had executed their plans excellently and succeeded.

Covai women ICT_போதிமரம்

 

Tamilnadu Schools Notes Guides All Subjects - PDF Download

    






12th, 11th, 10th, 9th to 1st Standard All Standards - Latest Study Materials - English Medium & Tamil Medium - Download

12th, 11th, 10th, 9th - 1st Standard All Standards - Latest Study Materials - English Medium & Tamil Medium - Download


NMMS Exam - Mat And Sat - Question Paper With Answer Key - Download

 


12th Maths - Chapter 1 - Test Question Paper

 

10th Maths - Unit Test 1 - Question Paper

 


Special TET Paper II - Tentative Answer Key

 


11th Maths - Chapter 3 - Test Question Paper

 


12th Economics - Interior One Marks - Study Material

 


10th Maths - Chapter 1 - Test Question Paper

 

11th Standard - Unit Test - Question Paper

 


UG TRB - Zoology - Unit 5 - Study Material



10th Maths - Chapter 8 - Important 5 Marks Questions

 


11th Tamil - June Monthly Test 2026 - Question Paper

 

10th English - Unit Test 1 - Question Paper

 


12th Physics - 1st Mid Term Model Exam 2026 - Question Paper

 


12th Standard - June Monthly Test 2026 - Question Paper

 


12th Maths - Chapter 2 - Test Question Paper

 


10th English - June Monthly Test 2026 - Question Paper

 

UG TRB English - Test Question Paper with Answer Key

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive