Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறு தேர்வு முடிவு ஜூலை 20-ல் வெளியீடு

   

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளை ஜூலை 20-ம் தேதி வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
 

நாடுமுழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

20 லட்சம் பேர் அதன்படி, பலத்த பாதுகாப்புடன் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெற்றது. நாடுமுழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமார் 5,500 மையங்களில் நடந்த தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் 307 தேர்வுமையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வரும் 20-ம் தேதி வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive