Public Exam 2026
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?
☉புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
அ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?
Dial *99*99# from your Mobile handset
சமையல்
காஸ் மானியம் பெற, வங்கிக்
கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய,
பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம்
செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள்
மட்டுமே பயன்படுத்த முடியும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரதரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய
ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர்.
மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் அவர்
தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே போல் கல்வியாளர் மதன் மோகன் மால்வியாவுகும்
பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை குறிப்பு - பள்ளி ஆசிரியராக வாழ்கையை தொடங்கியவர்
விதியோடு நான் ஆடும் விளையாட்டை பாரு!
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால்,
நேற்று காலமானார். சில மாதங்களுக்கு முன், அவர் மகன் கைலாசம் இறந்தார்.
இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு
முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொலைதூர கல்வி மையங்கள் படிப்படியாக மூட நடவடிக்கை - யுஜிசி துணைத்தலைவர் தகவல்
திருச்சி பாரதிதாசன் பல்கலை. 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், 606 பேருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பட்டம் வழங்கினார். இந்த
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 72,720 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்
வழங்கப்பட்டது. விழாவில், டெல்லி பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (யுஜிசி)
துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் பேசியதாவது:
அண்ணா பல்கலை.யில் இலவச 6 மாத கால குளிர்சாதனப் பெட்டி தொழில் நுட்ப பயிற்சி
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி
தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும், சென்னை தெற்கு
ரோட்டரி சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக
வழங்கும் இந்த இலவசப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு
படித்திருக்க வேண்டும்.
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை
சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங்
பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில்
60 முதல் 90 இடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேவை காரணமாக சென்னை, மதுரை
உள்ளிட்ட நர்சிங் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலான
மாணவிகள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவில் ரத்து: புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
சுங்கச்சாவடிகளில்
பஸ், கார்களுக்கு விதிக்கப்படும் வரியை விரைவில் ரத்து
செய்ய மத்திய அரசு முடிவு
செய்து இருக்கிறது. நாடு முழுவதும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட
பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ்,
கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க
வரி வசூலிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி
திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள்
கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள்
தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான விளக்கங்களையும்
உரைநடையாக எழுதி அனுப்ப வேண்டும். அதேபோல, ஓவியம் வரைபவர்கள், ஒரு வெள்ளை
காகிதத்தில் திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை வரைந்து அனுப்ப வேண்டும்.
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்
பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம் எடுத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர் பணி தவிற மற்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. எந்த பள்ளியில் பணி செய்கிறார்களோ அந்த பள்ளியின் அருகில் அவர்களுக்கான இருப்பிடம் அமைத்து தரவேண்டும்.
மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது.
அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது.










