Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளி கழிப்பறைகளுக்கு பிறந்தது விடிவு: உள்ளாட்சிகளிடம் பராமரிப்பு பணி

          அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில், போதுமான கழிப்பறை வசதியில்லை. இருக்கும் பள்ளிகளிலும், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 
 

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்க ஏற்பாடு

         பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும்.
 

முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் மாணவியை அனுமதிக்க உத்தரவு

          முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (எம்.டி.எஸ்.) தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவியை அனுமதிக்குமாறு, புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதுதொடர்பாக டாக்டர் பி.பிரியகார்டியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: 

தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுடன் மேயர் ஆலோசனை

         பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து தலைமையாசிரியர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்தது. இதனால் மாநகராட்சி கல்வித் துறை மீது குறை கூறப்பட்டு வந்தது.

தமிழகம் உட்பட 21 போலி பல்கலைகள்: யு.ஜி.சி., எச்சரிக்கை

          பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்தி: உ.பி., ம.பி., டில்லி, பீகார், கர்நாடகா, கேரளா, தமிழகம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில், 21 போலி பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன.
 

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': 10ம் வகுப்பு மாணவர்களிடம் கிடுக்கிப்பிடி

         பத்தாம் வகுப்புத்தேர்வில் கையெழுத்துக் குளறுபடி, நடுவில் சில பக்கங்கள் மாயமானது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளரிடம், தேர்வுத் துறை இயக்குனரகம் விசாரணை நடத்தி உள்ளது.

'இ சேவை' மையங்கள் முடக்கம்: சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல்

             தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக 'இ சேவை' மையங்கள் இயங்காமல் முடங்கியதால், மாணவர்களுக்கு சான்றிழ்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 கலெக்டர் அலுவலகங்கள், 254 தாலுகா அலுவலகங்களில் 'இ சேவை' மையங்கள் செயல்படுகின்றன.
 

ஒரே பெயரில் 460 கல்லூரிகள்: பட்டியல் வெளியிட்டது அண்ணா பல்கலை

         மாணவர்களைக் குழப்பும் விதமாக, ஒரே பெயர் கொண்டுள்ள, 460 கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. கவுன்சிலிங்கின் போது, கல்லூரிகளின் பெயரை விட, கல்லூரிக் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பிளஸ்–2 மறுகூட்டலுக்கு நாளை கடைசி : 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்

          தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த 7–ந்தேதி வெளியிடப்பட்டது. 8–ந்தேதி முதல் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியில் இருந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.

பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதம்

         பிளஸ் 2 தேர்வில் பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சராசரியாக 84.26 சதவீதமாக உள்ளது. கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகளின் தேர்ச்சி அதிகபட்சமாக 99.20% என்ற அளவில் உள்ளது. 

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்

          டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் 34 மையங்களில் (அரசுப் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்) இன்று முதல் ஜூன் 9 வரை வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். ஜூன் 9 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 

மதுரையில் அமைகிறது 'எய்ம்ஸ்' மருத்துவமனை: அறிக்கை சமர்ப்பித்தது ஆய்வுக்குழு

        தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடங்களை ஆய்வு செய்த மத்திய குழு, ஆய்வு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவ மனை கிளை அமைக்க, மத்திய குழு பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கான குறுக்கெழுத்துப் போட்டி: சிபிஎஸ்இ அறிவிப்பு

      பள்ளி மாணவர்களுக்கு இடையே ஆங்கில மொழித் திறன், சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், குறுக்கெழுத்துப் போட்டியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.  இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் 171 உதவி, இளநிலை ஆய்வாளர் பணிகள்

        தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாகவுள்ள 171 உதவி ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


TAMILNADU MEDICAL COLLEGE CUT-OFF MARKS 2014 - 15


உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

 Image result for inverter 
            இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.

ஆய்வக உதவியாளர் பணியிடம்:விருதுநகர் மாவட்டத்தில் 41556 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

             விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 41556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

பிளஸ் 2 பொதுத் தேர்வு - தலைமை ஆசிரியர்களிடம் இன்று விசாரணை

            பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைவு குறித்து, ஆதி திராவிட மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட வாரியாக இன்று விசாரணை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், 84.26; மாநகராட்சி பள்ளிகள், 87; ஆதிதிராவிட பள்ளிகள், 82.43 சதவீதம் என, குறைந்த அளவு தேர்ச்சி பெற்றன. மாநில, மாவட்ட முன்னணி இடங்களையும் அரசு பள்ளி மாணவர்கள் பெறவில்லை.
 

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி

         பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.  
 

உடுமலை கல்வி மாவட்டம் அமைய எதிர்பார்ப்பு! நிர்வாக சிக்கலை சந்திக்கும் கல்வித்துறை

          திருப்பூர் மாவட்டம் உருவாகி, ஏழு ஆண்டுகளாகியும், உடுமலை, தாராபுரம் வருவாய் கோட்டங்களுக்கான கல்வி மாவட்டம், இதுவரை துவங்கப்படவில்லை. இதனால், நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை, கல்வித்துறையினர் சந்தித்து வருகின்றனர்.

மாட்டுப் பாலால் ஒவ்வாமையா: குழந்தைக்கு ஆட்டுப்பால் தரலாமே

           மாட்டுப் பாலால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு வெள்ளாட்டுப் பால் கொடுக்கலாம், என கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மாட்டுப்பால் மூன்று வயதிற்குட்பட்ட சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இக்குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் கொடுத்தால் எளிதில் செரிமானமாகும் என, கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

விலையில்லா சைக்கிள் பள்ளிகளுக்கு 'சப்ளை'

       பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ள, விலையில்லா சைக்கிள் பாகங்களை, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், சைக்கிள் நிறுவனங்கள் அனுப்பியுள்ளன. அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்பில் படிக்கும், மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்த, தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது.
 

மாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள்:தேர்வறைக்குள் அனுமதிக்க மறுத்ததால் சர்ச்சை


         காஷ்மீரில் பசுமாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள், அதை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க ‌மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

3,000 பணியிடங்கள் காலி: வி.ஏ.ஓ. சங்கம் அதிருப்தி

    தமிழகத்தில் 3,000 வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலியாக உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா-விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

      விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதையும் வரலாறு: அழிவின் விளிம்பில் அரிய பாடப்பிரிவுகள்: அவலத்தில் பி.ஏ., தமிழ் இலக்கியம்

          வேலைவாய்ப்பு, சம்பளம்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதால், தனியார் கல்லுாரிகளில் வரலாறு, தமிழ் இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அரியபாடப்பிரிவுகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

இன்ஜி., கல்லூரி திறன் பட்டியல் வெளியாவதில் சிக்கல்: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லாததால் அண்ணா பல்கலை மவுனம்

          அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி கிடைக்காததால், தமிழக பொறியியல் கல்லூரிகளின் செயல்பாட்டுத் திறன் பட்டியலை, இந்த ஆண்டு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சிற்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை

          மாமல்லபுரத்தில் உள்ள, அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இக்கல்லூரியில், தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை (பி.டெக்.,); கவின்கலை இளையர் மரபு சிற்பக்கலை பட்டம் (பி.எப்.ஏ.,); கற்சிற்பம், சுதை சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய தனித்தனி சிற்ப பிரிவுகள்; கவின்கலை இளையர் மரபு  ஓவியம் மற்றும் வண்ணம் (பி.எப்.ஏ.,), ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
 

கர்நாடகாவில் கல்வித்துறை பதவி உயர்வுக்கு கம்ப்யூட்டர் கல்வி முக்கியம்

       பெங்களூரு: 'கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான தேர்வில் வெற்றி பெறாத, அரசு பட்டப்படிப்பு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் அல்ல' என, பட்டப்படிப்பு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

புதுவைக்கு தனி மேல்நிலை கல்வி வாரியம் அமைக்க வேண்டும்: முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை

முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
      சமீபத்தில் வெளிவந்துள்ள பிளஸ்–2 பொதுத் தேர்வு முடிவுகள் புதுவையில் தேர்ச்சி சதவீதம் சென்ற ஆண்டைவிட குறைந்திருப்பதை காட்டுகிறது. 

குரூப்-2 தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா? - விளக்கம்

            துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழி லாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive