Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தரம் உயர்ந்த மேல்நிலை பள்ளியில் படிக்க ஆளில்லை: மாணவருக்கு டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவு.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர்எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
3 கிலோ மீட்டர்:

தமிழக அரசின் பள்ளிக் கல்வி கொள்கைப்படி, 300 பேர் மக்கள்தொகை குடியிருப்பை கொண்ட கிராமத்தின், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில், ஒரு துவக்கப்பள்ளி, 500 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமத்தின், மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில், ஒரு நடுநிலைப்பள்ளி இருக்க வேண்டும். அந்தவகையில், நடுநிலைப் பள்ளியாக உள்ள பள்ளிகள், மாணவர்களின் எண்ணிக்கை,குடியிருப்பு, இடவசதி ஆகியவை அடிப்படையாக கொண்டு, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மாணவரின் எண்ணிக்கை மற்றும் வசதியை அடிப்படையாக கொண்டு, உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில், மாநிலம் முழுவதும், 100 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதியதாக தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும், தலா, ஒரு தலைமை ஆசிரியர், எட்டு பட்டதாரி ஆசிரியர் என, 900 பணியிடங்கள் புதியதாக நிரப்பப்படும். ஆனால், காலதாமத அறிவிப்பால், ஏற்கனவே 10ம் வகுப்பு படித்து முடித்த மாணவர், அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பிளஸ் 1 வகுப்பு காலாண்டு தேர்வையும், சம்பந்தப்பட்ட பள்ளியில் முடித்துவிட்டார். இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட, 100 மேல்நிலைப் பள்ளிகளிலும்,நடப்பாண்டுக்கான மாணவர்களை சேர்க்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதிருப்தி:

தற்போது, பிளஸ் 1 வகுப்பில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லாததால், அவர்கள் நடப்பாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளியில் இருந்து, டி.சி., (மாற்றுச்சான்று) பெற்றுக்கொண்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், மீண்டும் பழைய பள்ளிக்கே, திரும்பி வந்து படிக்க, மாணவர் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல், கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அதன்படி, அந்த பள்ளிகளில், 10ம் வகுப்பு படிப்பு முடித்து, தற்போது, பிளஸ் 1 வகுப்பில், அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் பட்டியல் தயார் செய்யப்படும். பின், அவர்களை அந்த பள்ளி யில் இருந்து விடுவித்து (டி.சி., பெற்றுக் கொண்டு), தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவர். பாடத்திட்டம் ஒரே மாதிரியானது என்பதால்,எவ்வித பிரச்னையும் இல்லை. எனவே, பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டி.சி., வழங்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அறிமுகம்:

மேலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியி யல், உயிரியல் படிப்பு கொண்ட, ஒரு குரூப்பும், கலைப்படிப்பு சார்ந்த ஒரு குரூப் மட்டுமே, நடப்பாண்டு அறிமுகம் செய்யப்படும். கூடுதல் கட்டடம் மற்றும் ஆய்வகங்கள் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு வந்து சேரும். இவ்வாறு அவர் கூறினார்.




8 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. திரு பாடசாலை அட்மின் அவர்களுக்கு ஒரு பணிவான கோரிக்கை நமது மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் தடைகளை வெல்ல அவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் மட்டும் எந்த வித கருத்துக்களையும் அனுமதிக்காமல் அம்மாவுக்கு ஆதரவு தெரிவியுங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எங்களை போன்று தேர்வு பெறாதவர்களுக்கு அடுத்த பட்டியலில் முன்னுரிமை அளிக்க அம்மா உதவுவார்கள் எங்களின் நலனுக்காக தயவு செய்து இதற்கு உதவுங்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்று அனைத்து கருத்துக்களையும் தடை செய்யுங்கள் மிக்க நன்றி

      Delete
    2. சாரதா வைத்யநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றதை அடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் என்கிற போர்வையில், தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்களை பற்றி நினைத்தாலே, அருவருப்பாய் இருக்கிறது.இந்த வரைமுறை இல்லா வன்முறையில், நமக்கு புரியாத சில விஷயங்கள் பற்றி, ஆளுங்கட்சியிடமே சில சந்தேக கேள்விகள்:*ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், உங்களுக்கு யார் மீது கோபம்? தீர்ப்பை கொடுத்த நீதிபதி மீதா அல்லது வழக்கை தொடுத்தவர் மீதா?*உங்கள் தலைவர் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டதால், தலை கால் புரியாமல் கோபத்தை காட்ட வேண்டும் என, யார் உங்களுக்கு உத்தரவிட்டது?*வழக்கை, வெள்ளி விழா காண வழிவகுக்காமல், 18 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுள்ளதால், உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதா?*பொய் வழக்கு என ஒப்பாரி வைக்கிறீர்கள்... இதை பொய் வழக்கு என்று, பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்... அப்படிப்பட்ட பொய் வழக்கை உடைத்தெறிந்து, தகுந்த ஆவணங்களை கொடுத்து, வழக்கை வெற்றி கொள்ள உங்களுக்கு துப்பு இல்லாமல் போனது எதனால்?*அரசு, தனியார் சொத்துகளை அழிக்கும் தைரியம், உங்களுக்கு எப்படி வந்தது? அன்று, பா.ம.க.,வினர் அழித்த அரசு சொத்திற்கான இழப்பை, அக்கட்சி தான் ஈடு செய்ய வேண்டும் என, நீங்கள் பேசிய நியாயம், இன்று உங்களுக்கும் பொருந்துமா?*வழக்கு செல்லும் பாதையை சரி வர நோக்காமல், ஜெ., விடுதலையாகி விடுவார் என, மனக்கோட்டை கட்டி, லட்டு மற்றும் பட்டாசுகளை, பெங்களூருக்கு எடுத்துச் சென்ற, உங்கள் அறியாமையை கண்டு பாவமாகத் தான் இருக்கிறது. நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு, தமிழகத்தை வதைப்பது, எவ்விதத்தில் நியாயம்?*ஜெயலலிதா கைதான பின், உங்கள் கட்சியின் எந்த இரண்டாம் கட்டத் தலைவரும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என, கேட்டுக் கொள்ளவில்லை. இந்த வழக்கிற்கும், பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?பதில் சொல்லுங்கள்!
      இன்றைய தினமலர் "இது உங்கள் பக்கம்" ல் கண்டது .....

      கடும் மன உளைச்சலை தற்போது கட்சி பேதமற்ற சராசரி பொது மக்கள் & வியாபாரிகள் அனுபவித்து வருகின்றோமே ... அது உங்கள் கண்களுக்கு தெரியாதோ ???
      முன்னாள் முதல்வரின் பெயரை கெடுக்கும் செயல்பாடுகளை செய்யும் நபர்களை ,அவர் வெளிவந்த உடன் "தனி கவனிப்பு" உண்டு என்பதை மறவாதீர்கள்....

      Delete
    3. சாரதா வைத்யநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றதை அடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் என்கிற போர்வையில், தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்களை பற்றி நினைத்தாலே, அருவருப்பாய் இருக்கிறது.இந்த வரைமுறை இல்லா வன்முறையில், நமக்கு புரியாத சில விஷயங்கள் பற்றி, ஆளுங்கட்சியிடமே சில சந்தேக கேள்விகள்:*ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், உங்களுக்கு யார் மீது கோபம்? தீர்ப்பை கொடுத்த நீதிபதி மீதா அல்லது வழக்கை தொடுத்தவர் மீதா?*உங்கள் தலைவர் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டதால், தலை கால் புரியாமல் கோபத்தை காட்ட வேண்டும் என, யார் உங்களுக்கு உத்தரவிட்டது?*வழக்கை, வெள்ளி விழா காண வழிவகுக்காமல், 18 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுள்ளதால், உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதா?*பொய் வழக்கு என ஒப்பாரி வைக்கிறீர்கள்... இதை பொய் வழக்கு என்று, பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்... அப்படிப்பட்ட பொய் வழக்கை உடைத்தெறிந்து, தகுந்த ஆவணங்களை கொடுத்து, வழக்கை வெற்றி கொள்ள உங்களுக்கு துப்பு இல்லாமல் போனது எதனால்?*அரசு, தனியார் சொத்துகளை அழிக்கும் தைரியம், உங்களுக்கு எப்படி வந்தது? அன்று, பா.ம.க.,வினர் அழித்த அரசு சொத்திற்கான இழப்பை, அக்கட்சி தான் ஈடு செய்ய வேண்டும் என, நீங்கள் பேசிய நியாயம், இன்று உங்களுக்கும் பொருந்துமா?*வழக்கு செல்லும் பாதையை சரி வர நோக்காமல், ஜெ., விடுதலையாகி விடுவார் என, மனக்கோட்டை கட்டி, லட்டு மற்றும் பட்டாசுகளை, பெங்களூருக்கு எடுத்துச் சென்ற, உங்கள் அறியாமையை கண்டு பாவமாகத் தான் இருக்கிறது. நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு, தமிழகத்தை வதைப்பது, எவ்விதத்தில் நியாயம்?*ஜெயலலிதா கைதான பின், உங்கள் கட்சியின் எந்த இரண்டாம் கட்டத் தலைவரும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என, கேட்டுக் கொள்ளவில்லை. இந்த வழக்கிற்கும், பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?பதில் சொல்லுங்கள்!
      இன்றைய தினமலர் "இது உங்கள் பக்கம்" ல் கண்டது .....

      கடும் மன உளைச்சலை தற்போது கட்சி பேதமற்ற சராசரி பொது மக்கள் & வியாபாரிகள் அனுபவித்து வருகின்றோமே ... அது உங்கள் கண்களுக்கு தெரியாதோ ???
      முன்னாள் முதல்வரின் பெயரை கெடுக்கும் செயல்பாடுகளை செய்யும் நபர்களை ,அவர் வெளிவந்த உடன் "தனி கவனிப்பு" உண்டு என்பதை மறவாதீர்கள்....

      Delete
    4. Sir neenga ...... parti pola ... Hm keepitap .... Sir 18 yr vaitha vangana athu avangaludaiya thiramai .... Epa erugara nilamaila J vita veyra CM Tamil nata ozhunga ...hmmm. Nothing mudiyathu another. Person. ...

      Delete
    5. நண்பரே ... நான் அந்த/இந்த பார்ட்டியுமல்ல ...
      உங்களுக்கு பு## பிடிக்கும் பழக்கம் இருக்கலாம் .தவறில்லை .. ஆனால் அந்த பு## யை என் முகத்தில் நீங்கள் ஊதும் போதே என்னுள் கோபம் வருகிறது ...
      "என்ன வேண்டுமானாலும் செய்;ஆனால் அது மற்றொருவருக்கு துன்பமாக கூடாது " இதுவே என் கருத்து நண்பரே ....
      ஒழுங்கு என எதை குறிப்பிடுகிறீர்கள் .... புரியவில்லை நண்பரே ....

      Delete
  3. கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?


    மனிதன்: லண்டனுல இருந்து ஸ்ரீலங்கா கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!


    கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.


    மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்தர வேண்டும் என கேட்க கூடாது...


    கடவுள்: ஸ்ரீலங்கா கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive