Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜெ., ஜாமின் விசாரணை தாமதம்: பள்ளி திறப்பு தள்ளி போகுமா? - Paper News

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணை

தேதி, தள்ளி போனதால், பள்ளி திறக்கப்படும் தேதியும், தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா, ஜாமின் மனு மீதான விசாரணை, 1ம் தேதியான நேற்று முன்தினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரிக்க மறுத்து, 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஒத்தி வைத்தார். தமிழகத்தில், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, செப்., 27ம் தேதி துவங்கி, அக்.,5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி, பள்ளி வழக்கம் போல் திறந்து செயல்படும், என, அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலால், காலாண்டு தேர்வில் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கு, 7, 8ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று, பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பால், ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு, 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவருக்கு,அன்று ஜாமின் கிடைக்குமா என்ற விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில், பள்ளி, 6ம் தேதி திறக்கப்படுமா, விடுபட்ட தேர்வு, 6 முதல் நடக்குமா, 7ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணையில் குளறுபடி ஏற்பட்டால், தொடர்ந்து பள்ளி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 6ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல், தமிழகத்தில் கடையடைப்பு, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், பிற மாநில பஸ்கள் நிறுத்தம், உருவ பொம்மை எரிப்பு என, அசாதாரண சூழல் நிலவு கிறது. எனவே, பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறப்பு குறித்து முறையான அறிவிப்பை மீண்டும் வெளியிட வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கல்வி துறை அதிகாரிகள் கூறும் போது, 'காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், 6ம் தேதி, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைப்பது குறித்து, எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. பள்ளி கல்வி துறை தான், இதை முடிவு செய்து, அறிவிக்கும்' என்றனர்.




13 Comments:

  1. G.o M.S. no: 882
    dated 1.10.2014 bakrid october 6 will be Holiday..october 5 is revised as 6.10.2014

    ReplyDelete
  2. அரசு தன் கடமையை செய்யனும். தனித்தேர்வர்களின் மேல்நிலை பொதுத்தேர்வு தேதி மாற்றி 7ந்தேதி நடைபெறும் போது கல்வி நிலையங்கள் கண்டிப்பாக இயங்கும். அரசு அதிகாரிகள் தவறு செய்தால் யார் காப்பாற்றுவார்கள். அரசியல் வேறு ,அரசு வேறு;

    ReplyDelete
  3. My dear padasalai administrator, please upload or send me the quarterly exam answer keys for +2 economics. My mail id mk99591@gmail.com

    ReplyDelete
  4. Dear padasalai administrator, please upload the answer keys for quarterly exam, +2 history

    ReplyDelete
  5. Respected friends,
    Today 110 affected candidates register their name for file the case against GO 71 in supreme court . If u want to joint the Case.pls contact id: jollykannan@gmail.com. with in sunday.
    Request: pls clarify the doubt and then u joint the case. dont put rs to any account. contact directly.Thank u friends.

    ReplyDelete
    Replies
    1. let me know about the G.O 71 CASE REGARDING . I WILL TRY THEM TO JOIN IN THIS CASE

      Delete
  6. வருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .நேர்மறையாக சிந்திப்போம் .செயல்படுவோம் .

    தொடர்புக்கு :

    மு.ஜெயகவிதபாரதி -- 9486948138

    ரிஷி

    முனுசாமி -- 9940242636


    துரை -- 8608568256

    ReplyDelete
    Replies
    1. ஐயா ... எனக்கொரு ஐயம் .???
      "தமிழக முதல்வருக்கு வருத்தம்" என தாங்கள் குறிப்பிட்டவர் யார்??? தற்போதய
      முதல்வர் ஓ பி எஸ் அவர்கள் தானே .... நன்றி ....

      (முன்னாள் முதல்வர் என்பதை மறவாமல் குறிப்பிடவும்)

      Delete
  7. வருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .நேர்மறையாக சிந்திப்போம் .செயல்படுவோம் .

    தொடர்புக்கு :

    மு.ஜெயகவிதபாரதி -- 9486948138

    ரிஷி

    முனுசாமி -- 9940242636


    துரை -- 8608568256

    ReplyDelete
    Replies
    1. அரசால் பதவி பயனடைந்தவர்களை விட , பாதிக்கப்பட்டு இன்னல்களை சந்திக்கும் அரசால் TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ள அழைப்பு விடுத்திருப்பதில் கண்டிப்பாக கலந்து கொள்வது சிறப்ப்ர்கும். முறைப்ப்டி அனுமதி பெற்று செய்வதும் சால் சிறப்பு.

      Delete
  8. Bharathi Teacher Kandippaga Nangal Kalanthukondu sirappipom yendru vuruthi koorukindrom

    ReplyDelete
  9. இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  10. நண்பர்களே..ஆதிந துறை தவிர பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் வெளிவருமா..அவ்வாறு வரும் பட்சத்தில் எவ்வளவு காலியிடம் இருக்கும்? இதை நம்பி காத்திருக்கலாமா?..(வெயிட்டேஜ் முறையால் உடல் ;உள்ளம் பாதிக்கப்பட்டவன்)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive