NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’

                   முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு பள்ளி நிர்வாகம் விளக் கம் கேட்டுமெமோவழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

     தமிழகம் முழுவதும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 10-ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருவள் ளூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வு எழுதினர். சனிக்கிழமை இத்தேர்வு நடைபெற்றதால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து இத்தேர்வில் பங்கேற்றனர்.சில பள்ளிகளில் வேண்டு மென்றே அன்றைய தினம் பணிக்கு வரச் சொல்லி நிர்பந்தப்படுத்தியுள்ளனர். வராதவர்களுக்கு பள்ளி நிர்வாகம்மெமோவழங்கியுள்ளது.

                    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: சில பள்ளிகளில் அரை நாள் மட்டுமே விடுமுறை அளித்தனர். இதனால், தேர்வு முடிந்ததும் அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர்.மேலும், சில பள்ளிகளில் அன்றைய தினம் வேலைக்கு வராதவர்களிடம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கியுள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க விடுமுறை நாட்களில்ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த வேண்டும் என்றனர்.




5 Comments:

  1. தனது பள்ளி ஆசிரியர்கள் அரசுத் தேர்வுக்கு செல்ல மறுக்கும் இதுபோன்ற தனியார் பள்ளிகளின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. சொற்ப சம்பளம் கொடுக்கும்போதே இப்படிக்கெடுபிடி செய்யும் தனியார் பள்ளிகளின் போக்கைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. A school in Sankarapuam, villupuram dist. had done this, staff there suffered a lot..

    ReplyDelete
  4. Severe action edukanum.......

    ReplyDelete
  5. படிக்காதவன் எல்லாம் பள்ளிக்கூடம் நடத்தினால் படித்தவன் பாடு இப்படிதான் இருக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive