Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Exam instruction:|Hall supervisor:

அறைக்கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்:

1. ஆய்வு அலுவலரிடமிருந்து உரிய எழுத்துப்பூர்வமான ஆணை பெற்றவுடன் அந்தந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
2. அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு குறித்த அனைத்து அறிவுரைகளையும் சரியாக பெற்றுக் கொண்டு தங்களது தொலைபேசி / அலைபேசி எண்ணை கண்டிப்பாக முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அளிக்க வேண்டும்.
  • 3. ஓவ்வொரு தேர்வு நாளன்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் ( 8.00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
  • 4. உடன் தங்களது அலைபேசியினை அணைத்து விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தமது அலைபேசிகளை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்காமல், தம்முடன் தேர்வறையில் அறைக் கண்காணிப்பாளர்கள் வைத்திருப்பதாக பின்னர் கண்டறியப்பட்டால், அன்னார் மீது கடுமையான துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 5. முதன்மைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக அணிய வேண்டும்.
  • 6. அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு பணிக்கு வந்தவுடன் தேர்வுகட்டுப்பாட்டு அறையில் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு, மேசையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் விடைத்தாள் மற்றும் அறைக்குரிய வருகைப்பட்டியல் அடங்கிய துணி / ரெக்சின் பைகளுள் ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • 7. அறைக் கண்காணிப்பாளர் தான் எடுத்த உறையின் விடைத்தாட்களை வெளியே எடுத்து உறையின் மீதுள்ள தேர்வு எண்ணும், விடைத்தாளின் முகப்புச் சீட்டில் உள்ள தேர்வு எண்ணும், தேர்வர் வருகை சீட்டில் உள்ள தேர்வு எண்ணும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும் முதன்மைக் கண்காணிப்பாளரின் ஒப்ப உருவ நேர்படி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
  • 8. முதன்மைக் கண்காணிப்பாளர் 8.45 மணிக்கு வழங்கக் கூடிய வினாத்தாள் கட்டுகளைப் பெற்று, தேர்வு நாள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வறைக்குரிய பாடம், ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 9. தேர்வு அறைக்கு செல்லும் முன்பாக, விடைத்தாள், தேர்வர் வருகை சீட்டு, வினாத்தாள், வினாத்தாள் கட்டினை பிரிப்பதற்கான மடக்கு கத்தி ஆகியவை சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • 10. விடைத்தாளின் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளனவா என்பதை பிற்சேர்க்கை-7ன் படி சரிபார்த்த பின்னர் மேல் பகுதியில் ஒவ்வொரு இரண்டு பக்கங்களும் இணையுமிடத்தில் தேர்வு துறையின் ரப்பர் முத்திரையினை இட வேண்டும்.
  • 11. அறைக் கண்காணிப்பாளர்களால் தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள்
  • 1. தேர்வு துவங்குவதற்கு முன்பு அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை தேர்வர்களுக்கு அறிவித்து, தேர்வர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 2. தேர்வர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 3. தேர்வர்கள் தங்களது மேஜை மற்றும் நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச்சீட்டுகளும் இல்லை என்பதை தேர்வு தொடங்கும் முன்பே உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
  • 4. தேர்வர்கள் விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தமது தேர்வெண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதுதல் கூடாது.
  • 5. தேர்வர்கள் தேர்வெழுதும்போது சுடிரபா றுடிசம -செய்வதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • 6. கூடுதல் விடைத்தாட்கள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே கூடுதல் விடைத்தாளின் தேவையை அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் .இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படும்.
  • 7. தேர்வர்கள் ஒருசில விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில் , """"மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது"" என்ற குறிப்புரையை பேனாவினால் எழுதுமாறு அறிவுறுத்தல் வேண்டும். ஆனால் தேர்வரது/அறைக்கண்காணிப்பாளரது கையொப்பம் இடப்படக்கூடாது. மேலும் தேர்வரது பதிவெண்ணோ, பெயரோ எழுதப்படக்கூடாது என்றும் அறிவிப்பினை வழங்க வேண்டும்.
  • 8. விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தேர்வர் தாமே அடித்துவிடும் நிகழ்வானது ஒழுங்கீனச் செயல் எனக் கருதப்படும். அன்னாரது தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படுவதுடன் அடுத்து வரும் இரு பருவங்களுக்கு தேர்வினை எழுத அனுமதிக்க இயலாது என தேர்வுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே தேர்வர்கள் எக்காரணங் கொண்டும் தாம் எழுதிய விடைகளை தாமே அடித்தலை தவிர்த்தல் வேண்டும். - மேற்படி அறிவிப்புகளை தேர்வர்களுக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் அறிவித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • 12. 8.55 மணிக்கு அறைக் கண்காணிப்பாளர் தேர்வறைக்கு சென்றவுடன் வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை மேஜையின் மீது வைத்து விட்டு ( 9.00 மணிக்கு முதல் மணி அடித்தவுடன் தேர்வறையின் நுழைவுவாயிலில் தேர்வர்களின் நுழைவு சீட்டினை சரிபார்த்து, காலணி, பெல்ட், ஆகியவற்றை வெளியில் வைத்துவிட்டு, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். மேலும் தேர்வர்கள் அலைபேசி ஏதும் வைத்திருக்கவில்லை என்பதையும் சோதித்து உறுதி செய்ய வேண்டும். தேர்வர்களிடம் அலைபேசி இருப்பின் அன்னாரை தேர்வறைக்குள் அனுமதிக்கவே




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive