இருந்தாலும் முதலீட்டாளர் களுக்கு மைக்ரோசாஃப்ட் எந்த விதமான உத்தரவாதமும் கொடுக் கவில்லை என்று இதுகுறித்த தகவல் தெரிந்தவர்கள் கூறினார் கள். யாகூ நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் கூறும் போது, நிறுவ னத்தை வாங்குவது குறித்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால் நிறுவனத்தை மறுசீர மைப்பு செய்வதுதான் முதல் நோக்கம் என்று அவர் கூறினார்.

யாகூ நிறுவனத்தை பிரிக்க வேண்டும் என்பதை விட முக்கி யமான துணை தொழில்களை விற்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே முதலீட்டாளர் களிடமிருந்து அழுத்தம் வந்து கொண்டே இருக்கிறது.
முக்கியமான முதலீட்டாளரான ஸ்டார்போர்ட், யாகூ நிறுவனத்தில் 1.7 சதவீத பங்குகளை வைத் திருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு முதலே நிறுவனத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று கூறி வருகிறார். இது குறித்து மைக்ரோசாஃப்ட் மற்றும் யாகூ நிறுவனங்கள் கருத்து கூற மறுத்துவிட்டன. கடந்த 2008-ம் ஆண்டே யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாஃப்ட் முயற்சி எடுத்தது. அப்போதைய மைக் ரோசாஃப்ட் சி.இ.ஓ. ஸ்டீவ் பால்மர் ஒரு யாகூ பங்குக்கு 31 டாலர் கொடுக்க முன்வந்தார். ஆனால் அந்த இணைப்பு முயற்சி அப்போது தோல்வி அடைந் தது. இப்போது மீண்டும் மைக் ரோசாஃப்ட் யாகூவை வாங்க நடவடிக்கை எடுக்கிறது.