பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின. இதையடுத்து,
மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அனுமதி
வழங்கியுள்ளது.
மறுமதிப்பீடு தேவை
மறுமதிப்பீடு தேவை என்றால், விடைத்தாள் நகல் பெற வேண்டும். மறுகூட்டல்
மட்டும் போதும் என்றால், நேரடியாக விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்ப
பதிவு, நேற்று துவங்கியது. ஒவ்வொருவரும், அவரவர் பள்ளியில், எந்த
பாடத்துக்கு மறுகூட்டல் தேவை; எந்த பாடத்துக்கு விடைத்தாள் நகல் தேவை
என்பதை, தனியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொழி பாடம்
ஒன்றுக்கு, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும்
கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விண்ணப்ப பதிவு, இன்றும், 4ம்
தேதியும் நடக்கிறது. அதன்பின், விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டும்,
மறுகூட்டல்மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை
தெரிவித்துள்ளது.
இன்று வெளியீடு
இதற்கிடையில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த மாணவர்கள்,
தங்களுக்கான விடைத்தாள் நகலை, scan.tndge.in என்ற இணையதளத்தில், இன்று
பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நகல் பெற்றவர்கள், மதிப்பெண்ணை ஆய்வு செய்ததும், மறுகூட்டல்அல்லது
மறுமதிப்பீட்டுக்கு, 4 முதல், 6ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்து
உள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...