பிளஸ்
2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்தோர், வரும், 19ம் தேதி முதல், 'ஹால்
டிக்கெட்' பெறலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வுத்
துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த மாதம் துவங்க உள்ள, பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும், 19ம் தேதி பிற்பகல் முதல், ஹால் டிக்கெட் பெறலாம்.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.செய்முறை தேர்வில், குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெறாதோர், செய்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு இரண்டிலும், கட்டாயம் பங்கேற்க வேண்டும். செய்முறை தேர்வுக்கு, 200 மதிப்பெண் உள்ள, தொழிற்கல்வி மாணவர்கள், மீண்டும் செய்முறை தேர்வுக்கு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...