மத்திய
பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான, 'சிப்பெட்'டில்
உள்ள, பிளாஸ்டிக் அச்சு வார்ப்பியல், பிளாஸ்டிக் தொழில்நுட்ப டிப்ளமா
படிப்புகளுக்கு, வரும், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இது
குறித்து, சிப்பெட் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* பிளாஸ்டிக் பதனீட்டுத் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் ஆய்வு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகிய, ஒன்றரை ஆண்டு டிப்ளமா படிப்புகளில் சேர, வேதியியல் பாடத்துடன், மூன்றாண்டு பி.எஸ்.சி., அறிவியல் படிப்பு முடித்திருக்க வேண்டும்
* கம்ப்யூட்டர் பயிற்சியுடன் கூடிய, பிளாஸ்டிக் வடிவமைப்பு படிப்பில் சேர, இயந்திரவியல், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், கருவி மற்றும் உற்பத்திப் பொறியியல், மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கருவி மற்றும் வார்ப்பியல் ஆகியவற்றில், மூன்று ஆண்டு டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.
இது தவிர, சிப்பெட்டில், பிளாஸ்டிக் அச்சுவார்ப்பியல் தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளையோ, அவற்றுக்கு இணையான படிப்புகளையோ முடித்திருக்க வேண்டும்
* பிளாஸ்டிக் அச்சுவார்ப்பியல் தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகிய மூன்றாண்டு டிப்ளமா படிப்புகளில் சேர, 10வது வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்
* சிபெட் நிறுவனத்தில், மூன்றாண்டு டிப்ளமா படித்தவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டில், அண்ணா பல்கலையின், பி.இ., படிப்புகளில் சேரலாம். இதற்கான நுழைவுத் தேர்வு குறித்த விவரங்களை, www.cipet.gov.in என்ற, இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்
* இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, வரும், 27ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, 96771 23882, 94446 99936 என்ற எண்களில் பேசி, தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, சிப்பெட் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...