''அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., -
யு.கே.ஜி., வகுப்பு துவக்குவது குறித்து, முதல்வ ருடன் ஆலோசித்து,
சட்டசபையில் அறிவிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஆரம்ப பள்ளிகளில், 5 வயது முடிந்த குழந்தைகளை தான், 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும். இது மத்திய அரசின் விதி. ௫ வயதுக்கு குறைவான குழந்தைகளை, எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,வகுப்புகளில், பெற்றோர் சேர்க்கின்றனர்.எனவே, அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் துவக்குவது குறித்து, முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனை பெற்று, சட்டசபை கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அரசு நிர்ணயித்த கட்டண பட்டியலை, தனியார் பள்ளிகளில் ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...