காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் நாளை பதவியேற்பு

காரைக்குடி, அழகப்பா பல்கலை புதிய துணைவேந்தராக, இப்பல்கலையின் வரலாற்று துறை பேராசிரியர், என்.ராஜேந்திரன், நாளை காலை, 10:30 மணிக்கு, பதவியேற்க உள்ளார்.இவர் 34 ஆண்டு பேராசிரியராக பணியாற்றியுள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலை வரலாற்று துறை பேராசிரியராகவும், மேலாண்மை பள்ளி நிறுவனர் இயக்குனராகவும், சமூக விலக்கு மற்றும் உள்ளடங்கிய ஆய்வுகளுக்கான மைய இயக்குனராகவும், கலைபுலத்தின் தலைவராகவும், சமூக அறிவியல் பள்ளி முதன்மையராகவும் பணியாற்றியவர். தேசிய உயர்கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக, 2014 முதல் 2016 வரை, செயல்பட்டுள்ளார். 


மனித வள மேம்பாட்டு அமைச்சக இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில், 2008 முதல் 2015 வரை, உறுப்பினராக இருந்துள்ளார். யு.ஜி.சி., கோல்கட்டா மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலை மேம்பட்ட ஆய்வு மைய திட்ட சீராய்வு குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.பதிவாளர் குருமல்லேஷ் பிரவு வெளியிட்ட அறிக்கையில், இது
தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this

0 Comment to " காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் நாளை பதவியேற்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...