PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஆசிரியர் பகவான் - இது ஓர் ஆய்வு அல்ல,ஆழ்ந்த அனுபவப்பூர்வமான பதிவு

விமர்சனங்கள் வரலாம்...

இருந்தபொழுதும் சரியானது எதுவென்று தெரிந்த பின்னும் அதை செய்யாமல் இருந்தால் அவர்தான் கோழை எனச் சொல்வார்கள்..எனவே எனக்குச் சரியெனப் படுவதை இப்பதிவில் இடுகிறேன்..உங்களுக்கு தவறெனப் பட்டால் கடந்துபோகவும்...
மனித உணர்வில் அழுகை என்பதும், சிரிப்பு என்பதும், கோபம் என்பதும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தது..
ஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருந்து பணியாற்றிப் வேறொரு பள்ளிக்குச் செல்லும்பொழுது மாணவர்கள் அழுதனர்..
அதனால் அவர்  ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்கிறனர்.
குடியரசுத் தலைவர் விருது கொடுக்க வேண்டும் என்கிறனர் சிலர்.ஊடகங்கள் உச்சியில் தூக்கிவைத்து கொண்டாடி தீர்க்கின்றன.இத்தனை ஆண்டுகள் யாருக்கும் தெரியாத ஆசிரியர் பகவானின் செயல்பாடுகளுக்கு அளவுகோல் மாணவர்களின் அழுகை..இந்த அழுகையினை பணிமாறுதல்,பணிநிறைவு, பணி உயர்வு எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களிடம் எதிர்கொண்டிருப்பர்..
ஆனால் யாரும் இதனைச் செய்தியாக மாற்றியிருக்க மாட்டார்கள்.அது தங்களது பணி அனுபவத்தில் ஒன்று என எளிதில் கடந்திருப்பர்.
இதனால் நான் ஆசிரியர் பகவானை நான் குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டாம்.
ஆசிரியர் பகவானின் பணிகுறித்தும் அவரது சிறப்பு வாய்ந்த செயல்பாடுகள் குறித்தும் எனது முந்தைய பதிவைக் காணவும்..அவருக்கான அங்கீகாரத்தை மதிக்க வேண்டும். இளம்வயதில் இவரைப் பொன்றவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்..
ஆனால் அதே நேரத்தில்
மாணவர்களின் கல்வித்திறன்
மாணவர்களின் தனித்திறன் மேம்பாடு
மாணவர் சேர்க்கை
பள்ளிக் கட்டமைப்பில்
பங்களிப்பு
பள்ளிவளர்ச்சியில் பங்கேற்பு
சமூக அக்கறை
மாணவர் எதிர்காலம் குறித்த முன்னெடுப்புகள் என எவையும் கருத்தில் கொள்ளப்படாமல் மாணவர்கள் அழுதனர் என்பதனை மட்டும் அடையாளமாகக் கொண்டு பிற ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளும் ஊடகங்களின் மேம்போக்குத் தனம் எதனை நினைவூட்டுகிறது என்றால்.....
சூப்பர் சிங்கரில் போட்டியாளரையும், பெற்றோரையும் அழவைத்து டி.ஆர்.பி ஏத்துவது,
நடனப் போட்டி என்னும் பெயரில் மார்க் போட்டு அழவைக்கிறேன் என்னும் பெயரில் டி.ஆர்.பி யை எகிற வைப்பது... இவைதான் கண்முன்னே விரிகிறது...
பகவானின் உழைப்பிலோ,
செயலிலோ சிறிதும் குறை சொல்லவில்லை.. ஆனால் இதை ஊடகங்கள் கையாளும் விதம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வேறு திசைக்கு இழுத்துச் செல்லக்கூடும்..
உணர்ச்சிகளின் பால் உந்தப்பட்டு செய்யப்படும் எந்த ஒரு செயல்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் அறிவியல் ரீதியாக சரியானது அன்று டேனியல் கோல்மான் என்பாரின்  ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது..
நுண்ணறிவு அதிகம் கொண்ட ஒருவர்கூட உணர்ச்சிவயப்படும்போது மனச்சமநிலை இல்லை என்றால் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்க வாய்ப்பு உண்டு என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது..
அழுகை என்பது
அன்பின் வெளிப்பாடு
ஆற்றாமையின் வெளிப்பாடு
கோபத்தின் வெளிப்பாடு
இயலாமையின் வெளிப்பாடு
இப்படி ஏதாவது ஒன்றின் வெளிப்பாடே அன்றி நம் செயல்பாடுகளின் வெளிப்பாடோ, திறமையின் வெளிப்பாடோ அல்ல..
மாணவர்களுக்கு
அறிவை மேம்படுத்துவது மட்டுமல்ல,
உணர்வுகளை கையாளப் பழக்குவதுமே சரியான கல்விப்பணி ஆகும்..
இதன் மூலமே மனமுறிவு,
மனப்போராட்டம் போன்றவற்றில் இருந்து மாணவர்களை காக்கவும் மீட்கவும் முடியும்..
சரியான வழியை காட்டாவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து தவறான பாதையைக் காட்டிவிடக்கூடாது...
ஊடகங்களின் சக்தி,
சமூக வலைதளங்களின் சக்தி நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் அவை நல்ல முன்னுதாரணங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே விருப்பம்..அதுவே சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் நல்லது...
27 Comments:

 1. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.சார்.ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 2. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.சார்.ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 3. ஆம்.மிகவும் சரியான பதிவு.

  ReplyDelete
 4. உண்மை தான்.
  இடம் மாறுதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று நடந்தது எனக்கும். ஆனால் செய்தி ஆக்கவில்லை. அரசு பள்ளியில் எனது மாணவி என்பாடமான ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்களுடன்498 மதிப்பெண் பெற்று மாநில இரண்டாவது இடம் பெற்றுள்ள போதும் இது போன்று புகழடையவில்லை . அவர் மட்டும் தான் ஆசிரியர் என்பதை போன்று சித்தரிப்பது ஆச்சரியம்.

  ReplyDelete
 5. ஊடகம் உங்களை புகழ்ந்து இருந்தால் இதே கருத்து உங்களுக்கு பொருந்துமா

  ReplyDelete
 6. மிகச் சரியாக சொன்னீர்கள்...

  ReplyDelete
 7. மாணவர் உளவியல் சார்ந்த சரியான அலசல்... இப்பதிவரின் பெயர் என்ன?

  ReplyDelete
 8. உண்மைதான்...
  ஆசிரியர்கள் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது...

  ReplyDelete
 9. இவர் தமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளார்,நாமும் மாணவர்களாள் இந்த நிலைக்கு ஆளாக வேண்டுமே தவிர மற்றவர்கள் ஏதேதோ கூறுகிறார்கள் என்பதற்காக அரசு நடைமுறைகளை உதாசின படுத்தக்கூடாது,ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 10. அருமையான பதிவு.. இது போன்ற நிகழ்வுகள் யாருக்குமே தெரியாமல் அடுத்த பள்ளிக்கு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் நம்மில் நிறைய பேர் இருப்பார்கள். ஊடகங்களும், வாட்ஸ் அப்பும் இல்லாத காலத்திலேயே மாணவர்களுக்காக உழைத்த நம்முடைய ஆசிரியர்களும் பலர் உளர். அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பகவான் என்ற ஒரு ஆசிரியரைக் காண்பித்து சுயநலம் மிக்க ஆசிரிWர்கள் இவரை பாருங்கள் என்ற தலைப்புடன் வாட்ஸ்அப்பில் தலைப்பிட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் Public. இது ஒரு தவறான வழிகாட்டலே

  ReplyDelete
 11. மிக சரியான கருத்து

  ReplyDelete
 12. சரியான பதிவு. அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தவறான செய்திகளை வெளியிடும்முன் ஊடகங்கள் அந்த செய்தி பற்றிய உண்மை தன்மையை அறிந்த பின்பே வெளியிடவேண்டும்.
  ஏனெனில் சிற்பியின் கைகளை உடைத்தப்பின்பு சரியான சிற்பங்களை செய்ய முடியாது என்பதை ஊடகங்கள் உணரவேண்டும்.

  ReplyDelete
 13. உண்மை. மிக நன்று

  ReplyDelete
 14. இதே கருத்துதான் என் கருத்தும்.
  மாற்றலாகிப் போகும் போது அதிக மாணவியர், மாணவர் அழுவது இயற்கை.
  இதை சமூக ஊடகம் பெரிதாக்கி உள்ளது

  ReplyDelete
 15. தெளிவான சமன் படுத்திப விமர்சனம்.
  இன்றைய நிலையில் ஊடகங்கள் அனைத்தையும் நிர்ணயம் செய்து விடுகிறது

  ReplyDelete
 16. அய்யா சரியான பதிவு உங்கள் கருத்து என்னொட கருத்தோடு ஒத்திருக்கு....

  ReplyDelete
 17. அற்புதமான பதிவு தோழர்.

  ReplyDelete
 18. என் பள்ளியின் பிரச்சனைக்கு தங்கள் ஆலோசனை வேண்டும். மனமிருந்தால் தொடர்புகொள்ளவும். 8012512536

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group