பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.08.18


திருக்குறள்


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

விளக்கம்:

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

பழமொழி

Distance lend enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை

இரண்டொழுக்க பண்பாடு

1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர்க்கு உதவிசெய்ய முன்வருவேன்.

2.நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறர் மனம் வருந்தும்படி செயல்பட மாட்டேன்.

 பொன்மொழி

இரு கை கூப்பி கடவுளை வணங்குவதைவிட
ஒரு கை நீட்டி உதவி செய்.
இரு கை உன்னை வணங்கும் கடவுளாக!

            -அன்னை தெரசா

பொதுஅறிவு

1.பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?

லாலா லஜபதி ராய்

2.இந்தியாவில் சண்டிகர்-ஐ தலைநகரமாகக் கொண்ட  இரு மாநிலங்கள் எவை?

பஞ்சாப்
ஹரியானா

English words and. Meanings

Heaven     சொர்க்கம்
Hunt          வேட்டை
History      வரலாறு
Hailstone  ஆலங்கட்டி
Heavy        மிகுதியான

நீதிக்கதை

பொய் சொல்லாதே

*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.*

 *பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....*

*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,*

 *இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....*

 *அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.*

 *உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,*

*இல்லையேப்பா..,*
*நல்லா தானே இருக்கு" என்பார்.*

*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.*

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

ஏங்க..
*"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!*

 *"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு*
*சொல்லி டிராமா போடறீங்க"*

 உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்.....,

*"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!*

ஆனாலும்...,
 *"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!*

நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,
 *" தினம்*
*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்"......!!*

*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,*

அந்த பாட்டியிடம்,

*"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்".....!!*

 *"இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்"....?*

 உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு....,

*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,*

*"கொடுத்து சாப்பிட வைக்கிறான்"......!!*

*இது எனக்கு தெரியாது என்று*
*நினைக்கிறான்...!!*

*"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை"..!!*

 மாறாக...
 *" அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது"...*
என்றார் அன்போடு....,

*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்*
*ஜீவன் இன்னும் இருக்கு.....!!*

*"அன்பை விதையுங்கள்"....!!*

*"அதையே அறுவடை செய்வீர்கள்".......!!மூட நம்பிக்கைகள், தீண்டாமை வேரறுப்போம்
அன்பினால் உலகத்தை நிரப்புவோம்

இன்றைய செய்திகள்
13.08.2018

* 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

* கேரளாவில் மழை, வெள்ளத்தால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

* சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலம் " பார்கர் சோலார் புரோப்" நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

* வரும் 18 ஆம் தேதி தொடங்கஙவுள்ளஆசிய விளையாட்டில் இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வரும் கவுரவம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்துள்ளது.

*இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் நிலைத்து ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 320 ரன்களை சேர்த்திருந்தது.

Today's Headlines

🌸Kerala,Wayanad:Relief and rescue operations by Army, Navy and National Disaster Response Force (NDRF) personnel are under way in the district, and nearly 400 persons, who were stranded in the flood, have been evacuated so far.💧
🌸Chennai:The golden jubilee celebrations of the publication of the memorial volumes 1& 2 on Srinivasa Ramanujan, authored by P.K. Srinivasan, was held on Saturday.Organised by P.K.S. Math Education and Research Centre🌹
🌸Coimbatore:Chinmaya International Residential School emerges winner,A total number of 800 students (400 teams) from 60 schools in Coimbatore, Tirupur and the Nilgiris districts took part in The Hindu In School quiz contest held in Coimbatore on Saturday.🌹
🌸Railway Protection Force has urged the travelling public to alert the security agency using the RPF national helpline number ‘182’ in the event of any harassment of women and children.🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

Share this

0 Comment to "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.08.18"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...