டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன?


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு

70.01 ஆக சரிந்துள்ளது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு மீண்டும் ரூபாயின் மதிப்பு மிகப் பெரிய அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியக் காரணம்?
மேற்கு ஆசிய நாடான துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருள்கள் மீதான வரியையும் அதிகப்படுத்தியது டிரம்ப் அரசு. இதன் காரணமாக துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது.  அதாவது டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு நேற்று (திங்கள் கிழமை) 6.89 ஆக சரிந்தது. நேற்று மட்டும் 7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. லிராவின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளதால் உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச கரண்சிகளை விற்பதில் ரிசர்வ் வங்கியின் தலையீடு, பாதுகாப்பான முதலீட்டுக்கு ஏற்பட்ட போட்டித்தன்மை போன்ற காரணங்களாலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70.1 ஆக சரிவைக் கண்டது. 2018-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூபாய் மதிப்பு 9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு முன்னர் 2013-ம் ஆண்டு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 69.93 ஆக சரிந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
ரூபாயின் வீழ்ச்சி எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும்?
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இறக்குமதி மதிப்பு அதிகமாகும். கச்சா எண்ணெய் போன்ற சில இறக்குமதிகளை தடுத்து நிறுத்த முடியாது. அதிக மதிப்புக்கு இறக்குமதி செய்வது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகப்படுத்தும். மேலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விலையும் அதிகமாகும்

Share this

0 Comment to "டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன?"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...