அரசு ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது அவசியம்!

புதுவையில் இருசக்கர வாகனங்களில்
அரசு ஊழியர்கள்
அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். பொதுமக்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தாவுக்கு பிறப்பித்து ஒரு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
புதுச்சேரியில் இந்த ஆண்டு மட்டும் 969 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 91 விபத்துகள் அபாயகரமானவை. சாலை விபத்துகளை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக காவலர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உள்ள ஹெல்மெட் அணிவது சிறந்தது. மேலும் ஹெல்மெட்டில் இரவில் ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்.
மோட்டார் வாகன சட்டப்படி இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், பின்னே அணிந்திருந்தவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். சட்டப்படி ஹெல்மெட் அணியாமல் முதல்முறை பிடிபட்டால் ரூ. 100 அபராதம், 2–வது முறை பிடிபட்டால் ரூ.300 அபராதம் விதிக்கலாம்.
ஹெல்மெட் அணியாமல் செல்லும்போது முதல் தடவை பிடிபட்டால் ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 3 முறைக்கு மேல் அபரதாம் விதிக்கப்பட்டால் ஓட்டுனர் உரிமத்தை இடைநீக்கும் செய்யும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Share this

1 Response to "அரசு ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது அவசியம்!"

  1. மொபைலில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுபவர்களை பிடித்தாலே ஹெல்மெட் என்பது அவசியம் இல்லையே.விபத்துக்களும் தவிர்க்கப்பட்டு விடும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...